ராகுல் சாரின் பயிற்சியின் கீழ் விளையாடுவது எப்படி இருக்கும் தெரியுமா ? – மனம்திறந்த ப்ரித்வி ஷா

Shaw

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்த இந்திய அணியும் இலங்கை பயணித்துள்ளது. இந்தஅணியின் கேப்டனாக தவானும், பயிற்சியாளராக டிராவிடும் செயல்பட உள்ளதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

dravid

இந்நிலையில் இந்த தொடருக்கான துவக்க வீரராக இடம்பெற்றுள்ள ப்ரித்வி ஷா ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் விளையாடுவது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் விளையாடுவது மாறுபட்ட அனுபவமாக இருக்கும். அது ஒருவிதத்தில் எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கும்.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் எங்களது பயிற்சியாளராக ராகுல் சார் தான் இருந்தார். அப்போது தொடங்கி இப்போது வரை கிரிக்கெட் அனுபவங்களை அவருடன் பகிர்ந்து வருவது ஒரு நல்ல சூழலை அமைத்துக் கொடுக்கும். அவருடைய பயிற்சியின் கீழ் விளையாடுவது நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் ப்ரித்வி ஷா கூறினார்.

shaw 1

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : ராகுல் சார் எங்களுடன் இருப்பதால் வீரர்களின் ஓய்வு அறையில் நல்ல ஒழுக்கம் இருக்கும். அவரது பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன். இந்த தொடரை சிறப்பாக பயன்படுத்தி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பேன் என ப்ரித்வி ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தொடக்க வீரர் கில் காயம் காரணமாக இந்தியா திரும்ப உள்ளதால் அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷாவை துவக்க வீரராக தேர்வு செய்யவும் பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement