CSK vs DC : சென்னை அணியை வீழ்த்த பிரத்யேக திட்டம் வைத்துள்ளோம் – ப்ரித்வி ஷா

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ்

Prithvi
- Advertisement -

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து தற்போது மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட அணியாக வலம் வருகிறது.

Ishanth

- Advertisement -

ஏற்கனவே மும்பை அணியுடன் தோற்று உள்ள சென்னை அணி பேட்டிங்கில் சற்று சொதப்பி வருகின்றது. இருப்பினும் சென்னை அணி இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், இந்த போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள பிரத்யேக திட்டத்தினை டெல்லி அணி வீரர்கள் வைத்திருப்பதாக ப்ரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது : சென்னை அணியை வீழ்த்துவது என்பது சுலபமல்ல. ஆனால், நாங்கள் அதற்காக தற்போது முழுமையாக தயாராகிவிடும். அதன்படி சென்னை அணியின் பலமே சுழற்பந்து தான். அதனால் இந்த போட்டியில் யார் பந்துவீசினாலும் சரி அந்த பந்து சற்று தவறான பந்தாக வந்தாலும் சரி அதனை அடித்து நொறுக்குவேன்.

prithivi shaw

மேலும், அணியில் உள்ள மற்ற வீரர்களும் சென்னை அணியின் பந்துவீச்சினை அடித்து நொறுக்க திட்டம் வைத்துள்ளோம் அதனால் இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக நிறைய ரன்களை குவிப்போம் என்ற நம்பிக்கை எங்களிடத்தில் உள்ளது. வெற்றிக்காக 100% போராடுவோம் என்றும் ப்ரித்வி ஷா கூறினார்.

Advertisement