Prithvi Shaw : நான் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் நம்பிக்கை வைத்த இவர்களுக்கு நன்றி – ப்ரித்வி ஷா

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Prithvi
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Pant

போட்டி முடிந்து பேசிய ப்ரித்வி ஷா கூறியதாவது : நான் கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடவில்லை. ஆனால், என்மீது என் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அதிக நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தனர். அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கை என்னை சிறப்பாக விளையாடவைத்தது.

Shaw-1

மேலும், அணிக்கு தேவையான நேரத்தில் நான் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி. மேலும், இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடுவேன். பண்ட் முக்கியமான ஆட்டத்தில் சிறப்பாக ஆடுகிறார். சென்னை அணிக்கு எதிராக எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை பயிற்சியை கடினமாக மேற்கொள்ள உள்ளோம் என்று ப்ரித்வி ஷா கூறினார்.

Advertisement