இந்திய அணியில் இருந்து நீங்கப்பட்டதும் கதவை சாத்திக்கொண்டு அழுதேன் – இளம்வீரர் பகிர்ந்த சோகம்

Shaw-1
- Advertisement -

பிரித்வி ஷா சென்ற வருடம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். தொடரின் முதல் போட்டியில் சரியாக விளையாடாத பவரை அடுத்த இரண்டு போட்டிகளில் கேப்டன் ரகானே உட்கார வைத்தார். அணியின் தேவைக்கு அதுதான் சரியாக பட்டது. இருப்பினும் தான் சரியாக விளையாட காரணத்தினால் வெளியே உட்கார வைக்கப்பட்டது மிகுந்த வேதனை தந்ததாக பிரித்வி ஷா அன்மையில் தெரிவித்துள்ளார்.

Shaw

- Advertisement -

மேலும் இதுபற்றி கூறிய பிரித்வி ஷா : நான் வெளியே உட்கார வைக்கப்பட்டதும் மிகவும் மனம் வருந்தினேன். இங்கே நாம் நீடிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது கடின உழைப்பு வேண்டும் என்று முடிவெடுத்தேன். பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி என்னை புறக்கணித்தது. நான் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

முன்பே முடிவு எடுத்தது போல இங்கு திறமை மட்டும் போதாது கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இங்கு நாம் நிலைநாட்ட முடியும் என்று எண்ணினேன். கடின உழைப்புக்கு நிச்சயம் ஒருநாள் நாம் நினைத்த தருணங்கள் பரிசாக வந்தடையும் என்று நம்பினேன். நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போது தனியாக சென்று அறையில் அழுதேன். அப்போது நான் மதிப்பற்றவன் போல உணர்ந்தேன் என தனது சோகமான பக்கத்தை பகிர்ந்து கொண்டார்.

Shaw

பிரித்வி ஷா தற்போது நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மொத்தமாக எட்டு இன்னிங்ஸ்களில் ஆடி உள்ளார். மொத்தமாக 865 ரன்களை 165.40 என்கிற அபாரமான ஆவரேஜ் விகிதத்தில் அடித்து அசத்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் ஒரு 200 , மொத்தம் 4 சதங்களை அடித்து அனைவரது கவனத்தையும் இவரது பக்கம் திருப்பியிருக்கிறார்.மேலும் கேப்டனாக இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சதம் எடுத்தார்.

shaw 2

அது மட்டுமல்லாமல் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பான தொடக்கம் (77 ரன்கள் ) கொடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்து கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.பிரித்திவி ஷாவின் இத்தகைய வெற்றிக்கு அனைத்து ரசிகர்களும் சோசியல் மீடியாவில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement