ஒருமுறை, இருமுறை அல்ல பலமுறை பார்த்துள்ளேன். அவரின் அருகில் இருந்தது அதிர்ஷ்டம் – ப்ரித்வி ஷா நெகிழ்ச்சி

Shaw
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-ஆவது ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் கேப்டன் தோனி முக்கிய காரணமாக இருந்தார்.

dhoni

- Advertisement -

6 பந்துகளில் 18 ரன்களை விளாசிய தோனி கடைசி ஓவரின் போது சென்னை அணியை த்ரில்லிங்கான வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் துவக்க வீரரான பிரித்வி ஷா மகேந்திர சிங் தோனி குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போதைக்கு அணியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகிறோம். எங்களது அணி தற்போது சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது. வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொடுத்து பயணித்து வருகிறோம்.

shaw

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் இறுதி போட்டிக்குள் நுழைய எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. அந்த நம்பிக்கையில்தான் இப்போது உள்ளோம் என்னை பொருத்தவரை தோனி கிரிக்கெட்டின் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர். பலமுறை அவரது இந்த சிறப்பான பேட்டிங் மூலம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனது இந்த சிறப்பான ஆட்டத்தை இவருக்காக மட்டுமே நான் சமர்பிக்கிறேன் – ராபின் உத்தப்பா ஓபன்டாக்

இறுதிவரை போட்டியை களத்தில் நின்று முடித்துக் கொடுத்துள்ளார். தோனியை ஒரு தலைவராகவும், ஒரு வீரராகவும் அருகில் இருந்து பார்த்து எனது அதிர்ஷ்டம் என்று கருதுவதாக ப்ரித்வி ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்கு எதிரான இந்த போட்டியில் ப்ரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement