நானே இதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. திமிர் காட்டிய ப்ரித்வி ப்ரித்வி ஷா – என்ன நடந்தது?

Prithvi-Shaw
- Advertisement -

மும்பையை சேர்ந்த இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா கடந்த 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தாலும் இதுவரை நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. மிக இளம் வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமான அவர் அடுத்த சச்சின் என்று பலராலும் பேசப்பட்டு வந்தார்.

ப்ரித்வி ஷா வெளியிட்ட மோசமான பதிவு :

ஆனால் இந்திய அணியில் அறிமுகமாகிய சில தொடர்களிலேயே அவரது பேட்டிங் பார்ம் மோசமான நிலையை சந்தித்தது அதோடு கூடுதல் உடை அதிகரித்ததால் பிட்னஸ் விவகாரத்திலும் அவரது பெயர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளானது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் அவருக்கு இன்னும் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் அண்மையில் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அவர் அங்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா திரும்பி தற்போது மீண்டும் காயத்திலிருந்து திரும்பி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வந்தார். ஆனால் மும்பை அணிக்காக அவர் ரஞ்சி கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு ஒழுங்கீனமாக செயல்பட்டதாலும் அவர் தற்போது சிக்கலை சந்தித்துள்ளார்.

மேலும் பிட்னஸில் கவனம் செலுத்தாமல் இருந்ததாலும், பயிற்சிக்கு சரியாக வராததாலும் அவரை மும்பை அணியின் நிர்வாகம் ரஞ்சி கோப்பை அணியில் இருந்து வெளியேற்றியது. இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவர் பயிற்சியாளர்களுடன் இணைந்து ஃபிட்னஸ் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட கையேடு தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு மும்பை கிரிக்கெட் நிர்வாகத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அந்த வகையில் ரஞ்சி கோப்பையில் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் : ப்ரித்வி ஷா வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : “இதற்காகத்தான் நான் காத்திருந்தேன்”, “கிரிக்கெட்டில் இருந்து எனக்கு ஒரு சிறிய ஓய்வு தேவைப்பட்டது”, “நானே இந்த பிரேக்கை எடுக்க வேண்டும்” என்று நினைத்திருந்தேன்.. நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 2வது டெஸ்டில் இந்தியா அதை மாத்துனாலும் கவலையில்ல.. இதை செஞ்சு ஜெய்ப்போம்.. டேரில் மிட்சேல் பேட்டி

அவர் பதிவிட்ட இந்த பதிவுதான் தற்போது மும்பை அணி நிர்வாகத்திடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று நேரடியாக அவர் மும்பையை அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தை சாடி அவர் வெளியிட்டுள்ள பதிவால் நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. வீரர்கள் இதுபோன்ற அநாகரீகமான செயலை செய்யும் பட்சத்தில் நிச்சயம் அவர்களை பி.சி.சி.ஐ கண்டிக்கவும் தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement