நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 36 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா இத்தொடரை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருந்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது.
அதில் டாஸ் வென்று தவறுதலாக முதலில் பேட்டிங் செய்ததும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. அதன் காரணமாக இரண்டாவது போட்டி நடைபெறும் புனேவில் இந்தியா தங்களுடைய பலமான சுழலுக்கு சாதகமான பிட்ச்சை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. சொல்லப்போனால் புனேவில் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் பிட்ச் சுழலுக்கு சாதகமாகவே இருந்தது.
நியூஸிலாந்துக்கு கவலையில்ல:
இந்நிலையில் புனேவில் இந்திய அணி நிர்வாகம் பிட்ச்சை சுழலுக்கு சாதகமாக மாற்றினாலும் தங்களுக்கு கவலையில்லை என்று நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்சேல் கூறியுள்ளார். எம்மாதிரியான ஆடுகளத்தை கொடுத்தாலும் அதில் 20 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை மீண்டும் வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான சவால்கள் இருக்கும்”
“இலங்கையில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அதே போல இங்கேயும் அடுத்த போட்டி நடைபெறும் மும்பையிலும் எங்களுக்கு சவால் வரலாம். அங்கு வித்தியாசமான மண்ணால் ஆடுகளம் உருவாக்கப்பட்டிருக்கலாம். அங்கே வெற்றி என்பது ஒவ்வொரு ஆடுகளத்தையும் நீங்கள் எந்தளவுக்கு புரிந்து கொண்டு அதில் அசத்துவதற்கான வழியை கண்டறிகிறீர்கள் என்பதை பொறுத்தது”
நியூஸிலாந்தின் திட்டம்:
“எதிரணியின் பவுலர்கள் மீது அழுத்தத்தை திருப்பி கொடுப்பதைப் பற்றியது. இங்கே சுழலை எதிர்கொள்வது இயற்கையாக இருக்கலாம். எனவே நீங்கள் உங்களுடைய திட்டத்தில் தன்னம்பிக்கையுடன் இருந்து அதை நீண்ட நேரம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இங்குள்ள பிட்ச்சை எங்களால் மாற்ற முடியாது. எனவே எங்களுக்கு எதிராக வருவதில் ரியாக்சன் செய்து அதற்கு உட்பட்டு பறக்க வேண்டும்”
இதையும் படிங்க: அவரை குறைச்சு எடை போட்டு 2வது டெஸ்டில் ட்ராப் பண்ணிடாதீங்க.. நட்சத்திர வீரருக்கு ஷமி ஆலோசனை
“நியூசிலாந்து அணியாக நாங்கள் நிகழ்காலத்தில் இருந்து பெருமையுடன் விளையாட விரும்புகிறோம். நிகழ்காலத்தில் எங்கள் காலில் நின்று விளையாட உள்ளோம். பிட்ச்சை எங்களால் மாற்ற முடியாது. ஆனால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிந்து கொஞ்சம் ரன்களையும் குவித்தால் வெல்ல முடியும் என்று உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அக்டோபர் 14ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



