தொடர்ச்சியாக சதங்களை விளாசி இந்திய அணியின் கதவை மீண்டும் பலமாக தட்டும் இளம் வீரர் – வாய்ப்பு கிடைக்குமா ?

Shaw
- Advertisement -

விஜய் ஹசாரே தொடர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தமாக 38 ஸ்டேட் அணிகள் இதில் பங்கேற்றது. இத்தனை அணிகளிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு மும்பை , உத்ரபிரதேஷ் , கர்நாடகா மற்றும் குஜராத் தகுதி பெற்றது. இந்த நான்கு அணைகளும் மும்பை மற்றும் உத்திர பிரதேஷ் இறுதி போட்டியில் நேற்று விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த உத்தரப் பிரதேச அணி 312 ரன்கள் டார்கெட் ஸ்கோர் ஆக வைத்தது. அந்த அணியில் இருந்து அதிகபட்சமாக மாதவ் கௌஷிக் 158 ரன்கள் குவித்தார். பின்னர் சேஸ் செய்த மும்பை அணி நாற்பத்தி இரண்டாவது ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

shaw 2

- Advertisement -

மும்பை அணியில் அதிகபட்சமாக ஆதித்ய தாரே 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் பட்டம் கொடுக்கப்பட்டது. பிரித்வி ஷா இந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மொத்தமாக எட்டு இன்னிங்ஸ்களில் ஆடி உள்ளார். மொத்தமாக 865 ரன்களை 165.40 என்கிற அபாரமான ஆவரேஜ் விகிதத்தில் அடித்து அசத்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் ஒரு 200 , மொத்தம் 4 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என அபாரமாக அடித்து அனைவரது கவனத்தையும் இவரது பக்கம் திருப்பியிருக்கிறார்.

இதற்கு முன்பு மயங்க் அகர்வால் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்ந்து வந்தார்.அதை இந்த ஆண்டு மாற்றி எழுதி இருக்கிறார் பிரித்வி ஷா.மேலும் ஒரு மேட்சில் அதிக ஸ்கோர் அடித்த வீரராகவும் பிரித்திவி ஷா புதிய ரெக்கார்டு படைத்துள்ளார். அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 227 ஆகும். மேலும் கேப்டனாக இந்த தொடரில் காலிறுதி போட்டியில் அடித்த சதம் (185*) மற்றும் அரையிறுதிப் போட்டியில் சதம் (165) எடுத்ததோடு மட்டுமல்லாமல் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பான தொடக்கம் (77 ரன்கள் ) கொடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்து கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.

shaw 1

ஆஸ்திரேலிய சுற்றுத்தொடர் இவரை மனதளவில் காயப்படுத்திய தனிமையில் இருந்ததாக ப்ரித்வி ஷா கூறியுள்ளார். அங்கு சரியாக பெர்பார்ம் செய்யாத காரணத்தினால் சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை மனதில் வைத்துக்கொண்டு கடின பயிற்சியால் இன்று விஜய் ஹசாரே தொடரை ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார்.

Shaw

இந்நிலையில் மீண்டும் பற்றி ஷாவுக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வரும் நிலையில் , கிரிக்கெட் வல்லுனர்கள் சிலர் அவருக்கு வயது 21 தான் ஆகிறது நிச்சயம் அவருக்கு போதிய வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement