நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பிடித்த லிட்டில் மாஸ்டர் – விவரம் இதோ

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான டி20 இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி நியூசிலாந்து புறப்படுமுன் தற்போது இந்திய ஏ அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. நியூசிலாந்து அணியுடன் இந்திய ஏ அணி சில போட்டிகளில் மோத உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து இருந்த ப்ரித்வி ஷா ஏற்கனவே தோள்பட்டை காயம் காரணமாக சிகிச்சை எடுத்தால் நியூசிலாந்து செல்லும் இந்திய ஏ அணியுடன் அவரால் பயணிக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது அவருடைய காயம் இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் ஒத்துழைப்பால் முழுமையாக குணமடைந்து உள்ளதால் தற்போது நியூசிலாந்து செல்ல உள்ளார். மேலும் இந்திய ஏ அணியில் இணையும் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Shaw

இந்திய அணியில் தற்போது ரோகித் சர்மா மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் அவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் இவருக்கு அணியில் இணைய ஒரு வாய்ப்பு இருக்கும். இதற்கு முன்னதாக இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக ரிஸ்க் எடுக்கவேண்டாம் என இந்திய ஏ அணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -