சி.எஸ்.கே அணிக்கு வரும் ப்ரித்வி ஷா.. முக்கிய காரணமே இதுதானாம்.. டிரையல்ஸ் முடிஞ்சாச்சு – விவரம் இதோ

Prithvi Shaw
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 18 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2026-ஆம் ஆண்டிற்கான பத்தொன்பதாவது தொடர் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக டிசம்பர் மாதம் மினி ஏலம் நடைபெறும் என்றும் அதில் அனைத்து அணிகளும் தங்களது விருப்பப்பட்ட வீரர்களை தக்கவைத்துக் கொண்டு சில வீரர்களை வெளியேற்றி மினி ஏலத்தில் கலந்து கொள்ளும்.

சி.எஸ்.கே அணிக்கு வரும் பிரித்வி ஷா :

அந்த வகையில் சென்னை அணி ஏற்கனவே ஐந்து வீரர்களை கழட்டி விட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் சிஎஸ்கே அணி தற்போது இளம் வீரர்களை குறி வைத்து தங்களது அணியில் விளையாட வைத்து வருவதால் நிச்சயம் இந்த மினி ஏலத்திலும் அதிகளவு இளம் வீரர்களை வாங்குவதற்கான யோசனை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த மெகா ஏலத்தின் போது விலை போகாத மும்பையை சேர்ந்த அதிரடி துவக்க வீரரான பிரித்வி ஷாவை மினி ஏலத்தில் வாங்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் எதிர்வரும் 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக குறிப்பிட்ட சில வீரர்களை அழைத்து சிஎஸ்கே நிர்வாகம் சோதனை ஆட்டத்தில் பங்கேற்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் முக்கிய வீரராக பிரித்வி ஷா கலந்து கொண்டு பிளமிங் தலைமையின் கீழ் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. மும்பையை சேர்ந்த பிரித்வி ஷா பார்ம் அவுட் காரணமாகவும், ஒழுக்கமின்மை காரணமாகவும் அங்கிருந்து வெளியேறி மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் வேளையில் ருதுராஜ் தலைமையின் கீழ் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இப்படி உள்ளூர் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையின் கீழ் அவர் விளையாடுவதாலே சிஎஸ்கே அணியின் டிரையல்ஸ்க்கு அழைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு ருதுராஜின் ஆதரவும் பிரித்வி ஷாவுக்கு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் பிரித்வி ஷா மினி ஏலத்தில் வாங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் முதல் சர்வதேச வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தனா நிகழ்த்திய – வரலாற்று சாதனை

ஏனெனில் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 போட்டியில் மூன்றாம் இடத்தில் விளையாடி வரும் வேளையில் ஆயுஷ் மாத்ரேவுடன் பிரித்வி ஷா களமிறங்கினால் சரியாக இருக்கும் என்று அவர் யோசித்திருக்கலாம். அதனாலே அவர் சென்னை அணியில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement