Prithvi Shaw : சச்சின் போன்று அதே ஸ்டைலில் அப்பர்கட் சிக்ஸ் அடித்த ப்ரித்வி ஷா – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Prithvi-Shaw
- Advertisement -

சச்சின் டெண்டுல்கரை ரோல் மாடலாக வைத்து விளையாடிவரும் இளம் வீரரான ப்ரித்வி ஷா அவரைப்போன்றே பல ஷாட்களை ஆடுவதாக பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று புவனேஷ்வர் குமார் வீசிய பவுன்சர் பந்தில் ப்ரித்வி ஷா சச்சின் டெண்டுல்கர் போன்று அப்பர்கட் சிக்ஸ் ஒன்றினை அடித்து அசத்தினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Advertisement