ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்து சாதனை படைத்த ப்ரித்வி ஷா – இதுல இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு

shaw-2
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆண்ட்ரே ரஸலின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 156 ரன்களை எடுத்தது.

dc

- Advertisement -

இதன் மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கும் சென்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்வி ஷா இந்தப் போட்டியில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரை வீசினார் இளம் வீரரான ஷிவம் மாவி. அந்த ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை அடித்த ப்ரீத்வி ஷா, ஐபிஎல் தொடர்களில் ஒரு இன்னிங்சின் முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடர்களில் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகள் அடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

shaw

இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பௌலரான ஸ்ரீநாத் அரவிந்த் வீசிய ஓவரில், அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அஜிங்கிய ரஹானே தொடர்ச்சியாக ஆறு பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அது அந்த இன்னிங்சின் 14வது ஓவர் ஆகும். அவருக்குப் பிறகு ப்ரித்வி ஷா தான் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு பவுண்டரிகளை அடித்திருக்கிறார்.

shaw 1

இப்போட்டியில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ப்ரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடக்கம். மேலும் அவர் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement