வீடியோ : முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை அடித்து அசத்திய ப்ரித்வி ஷா – வைரலாகும் வீடியோ

Shaw-3

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 25வது லீக் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக டெல்லி அணியின் துவக்க வீரர்களான ப்ரித்வி ஷா 41 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரி என 82 ரன்கள் குவித்து அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

shaw-2

இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி இலக்கு எளிதானது என்பதால் சற்று நிதானமாக ஆடி இறுதி வரை கொண்டு சென்று வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எப்பொழுதும் அதிரடியாக விளையாடி பழக்கப்பட்ட ப்ரித்வி ஷா நேற்றைய போட்டியில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதிலும் குறிப்பாக கொல்கத்தா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிவம் மாவி வீசிய முதல் ஓவரில் முதல் பந்து வொயிட்டாக வர அடுத்து வந்த ஆறு பந்துகளையும் அனாவசியமாக பவுண்டரி அடித்து தனது வெறித்தனத்தை காண்பித்தார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அளித்த ரஹானே சாதனையை ப்ரித்வி ஷா சமன் செய்தார்.

இவர் மேலும் ஒரு சிறப்பாக அதனை போட்டியின் துவக்க ஓவரிலேயே படைத்து அசத்தியுள்ளார். முதல் ஓவரிலேயே கொல்கத்தா அணியின் மனநிலையை உடைக்கும் அளவிற்கு 6 பவுண்டரிகளை அடித்து நொறுக்கிய ஷா சிறப்பாக விளையாடி கொல்கத்தா அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ :

- Advertisement -