தோனியின் வித்தையை பார்த்து அதிர்ச்சியுடன் வெளியேறிய ப்ரித்வி ஷா – வைரலாகும் வீடியோ

Shaw
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

CSK_VS_DC

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 64 ரன்களை குவித்தார். அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்ட நாயகனாக திகழ்ந்த ப்ரித்வி ஷா தோனியின் அபாரமான ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அணியின் ஸ்கோரை விரைவாக அதிகரித்துக் கொண்டிருந்த ப்ரித்வி ஷா பியூஷ் சாவ்லாவின் ஓவரில் ஏறி வந்து சிக்ஸ் அடிக்க முயற்சித்து பந்தை கீப்பரிடம் விட்டார். ஸ்டம்பிற்கு பின்னால் நிற்பது தோனி என்பதால் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் தோனியினால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.

மேலும் பந்து தோனியிடம் சென்றதை கண்ட ப்ரித்வி ஷா நிச்சயம் நாம் அவுட் ஆகி விடுவோம் என்பதை உணர்ந்து சோகத்துடன் முகத்தை இறக்கி நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement