இவரை ஏன் அணியில் சேர்த்தீர்கள். பார்த்தீங்க இல்ல இவரோட மோசமான பேட்டிங்க – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Gill

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக அடுத்ததாக தனது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்தது.

rahane

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 39 ரன்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் இந்திய அணிக்கு தற்போது தோல்வியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது.

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடும் பிரித்வி ஷாவின் ஆட்டம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் ஊக்க மருந்து சோதனை காரணமாக 8 மாதங்கள் தடைப்பட்டிருந்த ப்ரித்வி ஷா இந்த தடைக்கு பிறகு தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடுகிறார். அதிலும் முதல் இன்னிங்சில் 16 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

shaw

மேலும் இவரது இந்த சொதப்பல் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளத்தில் பலரும் இவரது ஆட்டத்தை பற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் நியூசிலாந்தில் நடைபெற்ற இந்திய ஏ அணி போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் இரட்டை சதம் மற்றும் சதம் என அசத்தினார். ஆனால் அவரை தேர்வு செய்வதை விடுத்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ப்ரித்வி ஷா தேர்வு செய்தது தவறான முடிவாக அமைந்தது.

- Advertisement -

gill 1

மேலும் சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றும் அவருக்கு பதிலாக கில்லை தேர்வு செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் ப்ரித்வி ஷாவின் பங்களிப்பு மோசமாக இருப்பதால் அடுத்த போட்டியில் மாற்றம் நிகழும் என்றும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -