சச்சின் மாதிரி ஆடுவார்.! இவரை அணியில் சேர்க்கலாம்.! கவாஸ்கர் கூறியது யாரை தெரியுமா.?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்த விவாதம் தான் இன்றைய “HOT TALK” ஆக உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதை அடுத்து தொடக்க வீரர் வாய்ப்புக்காக பல வீரர்களின் பெயர்கள் முன் வைக்கப்பட்டது. தற்போது அந்த List-ல் புதியதாக இணைந்திருப்பவர் இந்திய U-19 அணியின் கேப்டன் பிரிதிவி ஷா. இவரது தலைமையில் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை இந்திய U-19 அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

prithivi

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, தற்போது “நான் இந்திய அணிக்கு விளையாடுவது பற்றி எல்லாம் நினைக்க வில்லை”. என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறேன் ஒருவேளை, எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எனது சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளிப்பேன். மேலும் எனது நண்பன் எனக்கு கவாஸ்கர் சார் என்னைப் பற்றி பேசி இருப்பதாய் போனில் ஒரு “Screen Shot” அனுப்பினான்.

அதைப்பார்த்த, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் கவாஸ்கர் சார் என்னைப் பற்றி நம்பிக்கையாக பேசி இருப்பதால் அவரது நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து நிறைய ரன் குவிக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் அவர் பதிலளித்தார். தொடர்ந்து கிரிக்கெட் ஆடி நிறைய கற்றுக்கொள்ளும் எண்ணம் தான் இப்போது என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

prithiv 2

கடந்த IPL போட்டி தொடரின் இறுதியில் சில ஆட்டங்களில் ஓப்பனிங் பேட்ஸ்மனாக கம்பீர்க்கு பதிலாக களமிறங்கிய இவர் சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. IPL போட்டியின் போது இவரினை நீங்கள் பார்த்திருக்க நிறைய வாய்ப்புள்ளது. அரும்பு மீசையுடன் சச்சினை போன்று அவர் ஆடுவது “TOP CLASS”.