லாராவை நெருங்கி 379 ரன்கள் விளாசிய பிரிதிவி ஷா, ஆல் ஏரியாவிலும் அசத்தி ரஞ்சி கோப்பையில் புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான ரஞ்சிக் கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 10ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தியில் துவங்கிய 77வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பை மற்றும் அசாம் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு நம்பிக்கை நட்சத்திர இளம் தொடக்க வீரர் பிரித்திவி ஷா ஒருபுறம் அதிரடியாக நிற்க மறுபுறம் முசிர் கான் நங்கூரமாக நின்று ரன்களை சேர்த்தார்.

அந்த வகையில் ஆரம்பம் முதலே அசாம் பவுலர்களுக்கு பெரிய சவாலை கொடுத்து 123 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் முசிர் கான் 42 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அர்மன் ஜாபர் 27 ரன்களில் ரன் அவுட்டானார். அப்போது களமிறங்கிய கேப்டன் அஜிங்கிய ரகானேவுடன் ஜோடி சேர்ந்த பிரிதிவி ஷா தொடர்ந்து அதிரடியாக ரன்களைக் குவித்து விரைவாக சதமும் அடித்து அசத்தினர். அதனால் விரைவாக அவுட்டாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் நேரம் செல்ல செல்ல மேலும் செட்டிலாகி ரன்களை சேர்த்த நிலையில் மறுபுறம் பொறுமையாக செயல்பட்ட ரகானே அரைசதம் கடந்து தனது அணியை வலுப்படுத்தினார்.

- Advertisement -

அபார சாதனை:
இருப்பினும் மறுபுறம் அவுட்டாகாமல் அடம் பிடித்த பிரத்வி ஷா தொடர்ந்து அசாம் பவுலர்களை வெளுத்து வாங்கி முதல் நாளிலேயே இரட்டை சதமடித்து அனைவரது பாராட்டுகளை பெற்றார். அந்த நிலையில் இன்று துவங்கிய 2வது நாளிலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் முச்சதத்தை விளாசி மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடினார். அப்போதாவது அவுட்டாவாரா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்த அசாம் பவுலர்களை மீண்டும் மீண்டும் அடித்து நொறுக்கிய அவர் ஒரு வழியாக 3வது விக்கெட்டுக்கு 401 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 49 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 379 (383) ரன்களை 98.96 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அவருடன் விளையாடிய ரகானேவும் சதத்தை கடந்த நிலையில் 2வது நாள் உணவு இடைவெளியில் மும்பை 598/3 ரன்களை கடந்து வலுவாக விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் 379 ரன்கள் விளாசிய பிரதிவி ஷா ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த மும்பை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. பிபி நிம்பால்கர் (மகாராஷ்டிரா) : 443*, கதியாவார், 1948
2. பிரிதிவி ஷா (மும்பை) : 379, அசாமுக்கு எதிராக, 2022*
3. சஞ்சய் மஞ்சரேக்கர் (மும்பை) : 377, ஹைதெராபாத்துக்கு எதிராக, 1991
4. எம்வி ஸ்ரீதர் (ஹைதெராபாத்) : 366, ஆந்திராவுக்கு எதிராக, 1994

- Advertisement -

முன்னதாக ஏற்கனவே இந்தியாவின் முதன்மை உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் சதமடித்துள்ள அவர் முதன்மை உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் இரட்டை சதமடித்துள்ள நிலையில் தற்போது முதன்மை டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் முச்சதம் அடித்துள்ளார். இதனால் சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே, ரஞ்சி ஆகிய 3 வெவ்வேறு வகையான உள்ளூர் கிரிக்கெட்டில் சதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த முதல் வீரராக ஆல் ஏரியாவிலும் கில்லியாக அவர் அற்புதமான சாதனை படைத்துள்ளார்.

2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 2019இல் அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார். அதனால் சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.

இதையும் படிங்க: விராட் கோலியை மிஞ்சிய சூரியகுமார் – வரலாற்றின் மிகச்சிறந்த ஆல் டைம் ஆசிய டி20 பேட்ஸ்மேனாக பிரம்மாண்ட சாதனை

ஆனால் நாளடைவில் தொடர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதால் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய ரன்களைக் குவித்து உடல் எடையும் குறைத்து இந்தியாவுக்காக மீண்டும் விளையாட போராடி வருகிறார். இருப்பினும் சமீப காலங்களில் அவரை தேர்வுக்குழு புறக்கணித்து வரும் நிலையில் இந்த முச்சதால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement