சி.எஸ்.கே அணிக்கு எதிராக நாங்கள் தோற்றாலும். இவரோட ஆட்டம் சூப்பரா இருந்தது – ப்ரீத்தி ஜிந்தா பதிவு

Preity

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டனர். முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கே எல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில் மற்றும் நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்து வெளியேற நிலையில் தமிழக வீரர் ஷாருக்கான் மட்டும் பொறுப்பாக நின்று விளையாடி 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதன் காரணமாகவே பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் எடுக்க முடிந்தது.

chahar 1

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுப்லஸ்ஸிஸ் மற்றும் மொயின் அலி ஜோடி துணையோடு 15.4 ஓவரில் 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின்னர் இந்த போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ப்ரீத்தி, இன்றைய நாள் எங்களுக்கான நாள் இல்லை. மிகவும் இக்கட்டான நிலையில் வந்து ஷாருக்கான் மிக நன்றாக பேட்டிங் விளையாடினார் என்றும் சென்ற போட்டியை விட இந்த போட்டியில் பவுலர்கள் மிக அற்புதமாக விளையாடினார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இனி அடுத்து வரும் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட விரும்புகிறோம் என்றும் பதிவிட்டுள்ளார். அணியின் கேப்டன் கேஎல் ராகுல் போட்டி முடிந்தவுடன், முதல் போட்டியில் அடித்த பாதி ரன்கள் கூட இந்த போட்டியில் எங்கள அடிக்க முடியவில்லை. இதனை இனி அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் சரி செய்ய விரும்புகிறோம்.

sharukh

இனி அடுத்த போட்டிகளில் நிச்சயமாக இந்த தவறுகளை எல்லாம் சரி செய்து வெற்றி பெறும் முனைப்போடு விளையாடுவோம் என்று அணி கேப்டன் கேஎல் ராகுல் நம்பிக்கை அளித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி அதனுடைய அடுத்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த போட்டியும் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

shahrukh 2

இந்த போட்டி முடிந்ததும் சிறப்பாக விளையாடிய ஷாருக் கானின் இந்த ஆட்டம் குறித்து பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனியும் ஷாருக் கானை அழைத்து டிப்ஸ்களை வழங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.