இந்த ஐ.பி.எல் தொடரின் மதிப்பு மிக்க கெத்தான 5 தரமான வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இங்கு உள்ள மைதானங்கள் அனைத்தும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. எந்த வீரர் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடுகிறாரோ, எந்த வீரர் சுழற்பந்து நன்றாகவே வீசுகிறார்ரோ அவர் தான் இந்த வருடம் மிகச்சிறந்த மதிப்பு மிக்க வீரராக வர வாய்ப்பு இருக்கிறது. அப்படி இந்த வருடம் மதிப்புமிக்க வீரராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ள 5 வீரர்களை பார்ப்போம்

Rahul

- Advertisement -

கேஎல் ராகுல் :

இந்த வருடம் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருக்க போகிறார். இவர் தான் விக்கெட் கீப்பராக இருப்பார். இவர் துவக்க வீரராக களம் இறக்கப் போகிறார். கேப்டனாக பல வெற்றிகளை பெற்று விட்டு, கிட்டத்தட்ட 600 முதல் 700 ரன்களை அடித்து, விக்கெட் கீப்பராக சில கேட்ச் பிடித்தால் இவர் இந்த வருடம் மதிப்பு மிக்க வீரராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சுனில் நரைன் :

- Advertisement -

இவர் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். ஆனால், இவர் துவக்க வீரராக அவ்வப்போது களமிறங்குகிறார். திடீரென்று களமிறங்கி அதிவேகமாக அரைசதம் அடிப்பதில் வல்லவர். பல போட்டிகளில் சில அரை சதங்கள் அடித்து 25 விக்கெட்டுகளை எடுத்து விட்டால் இவரும் மதிப்பு மிக்க வீரராக வாய்ப்பிருக்கிறது

ABD-1

ஏபி டிவிலியர்ஸ் :

- Advertisement -

இவரை பற்றி பெரிதாக கூற தேவையில்லை. அதிரடியாக ஆடுவதில் வல்லவர். விராட் கோலி இவருக்கு இடமளித்து, துவக்க வீரராக அல்லது மூன்றாம் நிலை வீரராக களம் இறக்கினால், இவர் பல சதங்களை அடிக்க வாய்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால் இந்த வருடத்தில் மட்டும் ஆயிரம் ரன்களை கூட அடிக்க முடியும்.

Warner

டேவிட் வார்னர் :

- Advertisement -

தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கான ஐந்து முறை 500 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கிறார். அவர் அதிகபட்சமாக 738 ரன்கள் அடித்து இருக்கிறார். இவர் இந்த வருடம் அப்படி செய்தால் இவருக்கும் மதிப்பு மிக்க வீரராக மாற வாய்ப்பிருக்கிறது.

jadeja

ரவீந்திர ஜடேஜா :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ஆடக்கூடிய ஒரு வீரர் இவர். பந்து வீச்சிலும் இவருக்கு வாய்ப்பு இருக்கிறது, பேட்டிங்கிலும் வாய்ப்பிருக்கிறது இரண்டிலும் நன்றாக செயல்பட்டால் இவரும் மதிப்பு மிக்க வீரராக மாறுவார்.

Advertisement