விராட் கோலி பார்முக்கு திரும்பனும்னு கடவுளை பிராத்திக்கிறோம் – 2 பாக் வீரர்களின் கருத்தால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

Virat Kohli IND vs PAK
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக ஆகஸ்ட் 27 ஆம் தேதியான இன்று ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியது. 2016க்குப்பின் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு ஆசியாவின் டாப் 6 அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு ஈடாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பி விமர்சனங்களை உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவுகிறது.

ஏனெனில் கடந்த 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் அவர் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காததால் பொறுமையிழந்த விமர்சகர்கள் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்துள்ளார்கள். இருப்பினும் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்ட அவர் 33 வயதிலேயே 23000+ ரன்ளையும் 70 சதங்களையும் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தன்னை ஜாம்பவனாக நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அந்தளவுக்கு தரமான அவரின் அருமையை புரிந்த பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் போன்ற வெளிநாட்டவர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவை அவருக்கு கொடுத்து வருகின்றனர். மேலும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் எடுத்துக்கொண்ட அத்தனை வேலைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை அவருடைய பிரம்மாண்ட கேரியரில் இப்படி ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்முக்கு திரும்புவாரா:
இதிலிருந்து விடுபடுவதற்கு கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடி வரும் அவர் இடையிடையே 40, 50 போன்ற ரன்களை அடித்து 2019க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் பார்ம் அவுட்டாகி விட்டதாக அனைவரும் பேசுகிறார்கள். ஆரம்பகாலங்களில் அபாரமாக செயல்பட்டதால் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் அவர் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்ப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

- Advertisement -

அந்தளவுக்கு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவர் புள்ளி விவரங்களின்படி பார்ம் அவுட்டாகவில்லை என்றாலும் அவரது தரத்திற்கு செயல்படவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதன் காரணமாக இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு பழைய பன்னீர்செல்வமாக பார்முக்கு திரும்புவதற்கு சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ள அவர் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பாகிஸ்தான் ஆதரவு:
அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கும் அவரது தீவிர ரசிகர்கள் அன்னதானம் போடும் அளவுக்கு இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதைவிட விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என பாகிஸ்தானைச் சேர்ந்த சில வீரர்களும் நிறைய ரசிகர்களும் கடவுளை வேண்டுவது வியப்பாக உள்ளது. ஆம் இந்த ஆசிய கோப்பையில் கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடியின் காயத்தை ராகுல், சஹால் போன்ற வீரர்கள் வலைப் பயிற்சியின்போது கேட்டறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

அப்போது காயத்தை பற்றி கேட்டறிந்த விராட் கோலியிடம் “நீங்கள் பார்முக்கு திரும்பி முன்பு போலவே செயல்பட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று ஷாஹீன் அப்ரிடி மனதார கூறினார். அதனால் நெகிழ்ந்த விராட் கோலி புன்னகையுடன் அவருக்கு நன்றி தெரிவித்து கை கொடுத்து நீங்களும் விரைவில் குணமடைய வேண்டும் என பதிலளித்து சென்றார். அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இந்திய வீரர்களை போலவே பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்கள் மீது மரியாதையும் அன்பையும் வைத்துள்ளதை பார்த்து நெகிழ்ந்து போகிறார்கள்.

அதேபோல் விராட் கோலியின் பார்ம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாகிஸ்தான் முன்னணி வீரர் சடாப் கான் பதிலளித்தது பின்வருமாறு. “இந்த விளையாட்டின் ஜாம்பவானான அவர் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் களமிறங்கும் போது சதமடிப்பார் என்ற பயம் எதிரணிக்கு இருக்கும். அந்த வகையில் எங்களுக்கு எதிராக அவர் பெரிய இன்னிங்ஸ் விளையாடக் கூடாது. ஆனால் விரைவில் அவர் பழைய ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்”

இதையும் படிங்க : லீக்கான பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் 11 பட்டியல் – ரசிகர்கள் சாதுர்ய கண்டுபிடிப்பு

“இப்போதும் அவர் சிறப்பாகத்தான் செயல்படுகிறார். இருப்பினும் அவர் உருவாக்கியுள்ள தரத்திற்கு சுமாராக செயல்படுவதாக நமக்கு தோன்றுகிறது. எனவே எங்களது அணிக்கு எதிராக அல்லாமல் இந்த தொடரில் வேறு ஏதாவது அணிக்கு எதிராக அவர் சதமடிக்க நான் விரும்புகிறேன்” என்று கூறினார். முன்னதாக “இதுவும் கடந்து போகும் உறுதியோடு இருங்கள்” என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலிக்கு வெளிப்படையான ஆதரவு கொடுத்ததையும் யாரும் மறக்க முடியாது.

Advertisement