கரீபியன் லீக் டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய வீரர். யார் தெரியுமா ? – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பதைப் போன்று வெஸ்ட்இண்டீஸ் தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது .பொதுவாக இந்திய வீரர்களை வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களுக்கு பிசிசிஐ அனுமதிப்பதில்லை. ஒரு சில கண்டிஷன்கள்-உடன் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் அனுமதிப்பது வாடிக்கையாக இருக்கிறது.

மேலும் ஒரு வீரர் வெளிநாட்டில் உள்ள டி20 லீக் தொடரில் விளையாட வேண்டுமானால் பிசிசிஐ-இடம் அனுமதி பெறவேண்டும். அதிலும், குறிப்பாக அவர் இந்திய அணிக்காக தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரராக இருக்கக்கூடாது. இதுபோன்ற பல நிபந்தனைகள் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 48 வயதான மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் தாம்பே கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் கடந்த 7 வருடங்களாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் இவர் தேர்வாகி உள்ளார்.

கடந்த ஆண்டு கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வரை 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது தற்போது வரை 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக இவர் குஜராத் லயன்ஸ் அணிக்காக 2016ம் ஆண்டு விளையாடினார். இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க விருப்பம் இருப்பதாக பிசிசிஐ-இடம் தெரிவித்துள்ளார்.

Tambe

இதற்கு பிசிசிஐ சில நிபந்தனைகளுடன் இவரது பெயரை அந்த பிரீமியர் லீக் தொடரில் பதிவு செய்ய அனுமதித்து உள்ளது. மொத்தம் 23 வெளிநாட்டு வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து பிரவீன் தாம்பே மற்றும் பதான் ஆகியோர் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளார்கள். இந்த ஏலம் ஆன்லைனில் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது.

Advertisement