48 வயது வீரரை ஏலத்தில் எடுத்து ஆச்சரியபடுத்திய கொல்கத்தா அணி – மெக்கல்லம் போட்ட பிளான்

KKR-1
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

KKR

- Advertisement -

இந்த ஏலத்தில் கொல்கத்தா அணியின் ஒரு தேர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கொல்கத்தா அணி நிர்வாகிகளுடன் அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் இணைந்து 48 வயது வீரரான பிரவீன் தாம்பே 20 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு தங்கள் அணிக்கு வாங்கினர். கடந்த 2013ஆம் ஆண்டு 41 வயதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் பிரவீன் தாம்பே.

ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இவரை கடந்த சில வருடங்களாக எந்த அணியும் வயது முதிர்வின் காரணமாக வாங்கவில்லை. ஆனால் தற்போது 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திலும் இவர் பெயர் இடம் பெற்றது. தற்போது 48 வயது நிரம்பிய பிரவீன் தாம்பே எந்த அணியும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படையில் அவரை வாங்கியது.

tambe

இவரை வாங்க முக்கியக் காரணம் கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான பிரென்டன் மெக்கல்லம் தான். அவரை எப்படி உபயோகிக்க போகிறார்கள், என்ன யோசனை வைத்துள்ளார்கள் என்பது தொடரின் ஆரம்பத்தின் போது தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement