48 வயதிலும் கரீபியன் லீக் தொடரில் அசத்தலான கேட்ச் பிடித்த பிரவீன் தாம்பே – வைரலாகும் வீடியோ

Tambe

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தற்போது கரீபியன் லீக் டி20 தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான பிரவீன் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இந்தியா சார்பில் கரீபியன் லீக் தொடரில் முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் 48 வயதில் கிரிக்கெட் விளையாடி அசத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரவீன் தாம்பே நேற்று செயின்ட் கீட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இளம் வீரரைப் போல அசாத்தியமான ஒரு கேட்சை ஓடிவந்து பிடித்தார். 45 வயதிலும் அவர் பிடித்த இந்த அசத்தலான கேட்ச் தற்போது பலரது பாராட்டுக்களைப் பெற்றது. அதுமட்டுமின்றி அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே என்ற கூற்றினை அவர் உண்மையாக்கி உள்ளார். தற்போது கரீபியன் தொடரில் விளையாடி வரும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மறுக்கப்பட்டுள்ளார். ஏனெனில் பிசிசிஐ அனுமதி இன்றி அபுதாபியில் நடைபெற்ற 10 ஓவர்கள் கொண்ட ஒரு போட்டி தொடரில் கலந்துகொண்டு விளையாடினார்.

அதனால் அவருக்கு இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இருப்பினும் அவரால் இந்த தொடரில் விளையாட முடியாது மேலும் முதல் தர போட்டியில் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் உள்ளவர் 41 வயதில்தான் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகம் ஆனார் என்பதும் தற்போது அவருக்கு 48 வயதாவதும் குறிப்பிடத்தக்கது.