பாண்டியா மட்டும் நிலவில் இருந்து வந்தாரா? அதை சீட்டுல எழுதிக் கொடுக்க சொல்லுங்க.. பிரவீன் குமார் விளாசல்

Praveen Kumar 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்த அவர் தற்போது ஐபிஎல் 2024 தொடரில் விளையாட உள்ளார். குறிப்பாக குஜராத் அணியில் இருந்த அவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட உள்ளார். எனவே அந்த வாய்ப்பில் ரோகித் சர்மாவின் இடத்தில் அவர் எப்படி செயல்படப் போகிறார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக 2016இல் அறிமுகமாகி 2018 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடிய ஹர்திக் பாண்டியா ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற உணர்வை இந்திய ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்ததால் தன்னுடைய உடல் ஒத்துழைக்காது என்று சொன்ன அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மொத்தமாக புறக்கணித்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

நிலவில் இருந்து:
அதிலும் அடிக்கடி காயம் மற்றும் பணிச்சுமை என்ற பெயரில் அவர் இந்தியா விளையாடும் 100% போட்டிகளிலும் விளையாடுவதில்லை. அதே போல உள்ளூர் கிரிக்கெட்டின் பக்கமும் தலை வைத்து படுக்காத அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் தவறாமல் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடருக்கு வரும் பாண்டியாவுக்கு மட்டும் 2023 – 24 இந்திய சம்பள ஒப்பந்தத்தில் வாய்ப்பு கொடுத்தது ஏன்? என்று பிசிசிஐக்கு முன்னாள் வீரர் பிரவீன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிசான் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில் பாண்டியா மட்டும் நிலவில் இருந்து வந்தாரா? என்றும் பிரவீன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா நிலவில் இருந்து வந்தாரா? அவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அவருக்கு மட்டும் ஏன் வித்தியாசமான விதிமுறை இருக்கிறது”

- Advertisement -

“பிசிசிஐ அவருக்கும் அச்சுறுத்தலை கொடுக்க வேண்டும். ஏன் அவர் உள்ளூர் டி20 தொடரில் (டிஒய் பாட்டில்) மட்டும் விளையாட வேண்டும்? அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாட வையுங்கள். அல்லது டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவதற்கு நீங்கள் ஏற்கனவே 60 – 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளீர்களா”

இதையும் படிங்க: மேக்ஸ்வெலை விட டேஞ்சர்.. அதை செஞ்சுட்டு வரும் விராட் கோலி கையில் தான் இருக்கு.. முகமது கைப்

“ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத நீங்கள் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று எழுதிக் கொடுங்கள். இதையும் பிசிசிஐ கேள்வி கேட்க வேண்டும். ஒரு வீரருக்காக மட்டும் நீங்கள் விதிமுறையை மடக்க முடியாது. இருப்பினும் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை டி20 கிரிக்கெட்டில் பாண்டியா முக்கிய வீரராக இருந்தால் அவருடைய ஃபிட்னஸ் பாதிப்பதை நாம் விரும்ப மாட்டோம்” என்று கூறினார்.

Advertisement