அந்த விஷயத்துல தோனி மாதிரி.. வேற யாரும் பவுலர்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க.. பிரவீன் குமார்

Praveen Kumar 3
- Advertisement -

முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் கடந்த 2007 முதல் 2012 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடினார். புதிய பந்தை ஸ்விங் செய்து எதிரணிகளுக்கு சவாலை கொடுக்கக் கூடிய வேகப்பந்து வீச்சாளராக தன்னை அடையாளப்படுத்திய அவர் 2008 சிபி முத்தரப்பு கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியதை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது.

குறிப்பாக அந்தத் தொடரின் 2வது இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதன் காரணத்தாலேயே 2011 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தேர்வான அவர் கடைசி நேரத்தில் துரதிஷ்டவசமாக காயத்தை சந்தித்து வெளியேறியதால் ஸ்ரீகாந்த் அந்த இடத்தை பிடித்தார்.

- Advertisement -

தோனியின் கேப்டன்ஷிப்:
இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்து தடுமாறிய அவருக்கு போட்டியாக புவனேஸ்வர் குமார், முகமது ஷமி போன்ற அடுத்த தலைமுறை பவுலர்கள் வந்தனர். மறுபுறம் ஐபிஎல் தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறிய பிரவீன் குமார் 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்று தற்போது கிரிக்கெட்டிலிருந்து வெகு தூரம் சென்று விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் தம்முடைய கேரியரின் பெரும்பாலான போட்டிகளை மகத்தான கேப்டனாக போற்றப்படும் தோனியின் தலைமையில் பிரவீன் குமார் விளையாடினார். இந்நிலையில் கேப்டன்ஷிப் செய்வதில் தோனிக்கு நிகரில்லை என்று பிரவீன் குமார் பாராட்டியுள்ளார். குறிப்பாக ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தி அதற்கு தகுந்தார் போல் பந்து வீச சொல்லும் தோனி எப்போதுமே பவுலர்களுக்கு நிறைய உதவிகளை செய்யக்கூடிய கேப்டனாக இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மஹி பாய்க்கு எந்த நிகரும் கிடையாது. அவருக்கு ஒரு வீரரை எப்படி பயன்படுத்த வேண்டும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரியும். பொதுவாக அவர் ஃபீல்டிங்கை செட்டிங் செய்து அதற்கு தகுந்தார் போல் பவுலர்களை பந்து வீச செல்வார். அது தான் ஒரு நல்ல கேப்டனுக்கு அடையாளம் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் சொதப்பி அவங்க பெஞ்சில் இருந்தால் கூட பராவால்ல.. அதை செய்ங்க.. இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்

“அவர் ஃபீல்டிங் செட்டிங் செய்து விட்டு பின்னர் பந்தை பவுலரிடம் கொடுத்து வீச சொல்வார். அதனால் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை பவுலர்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஆம் சில நேரங்களில் நீங்கள் கேப்டனிடம் தேவையானதை சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக எத்தனை ஸ்லீப் வேண்டும், எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பது போன்றவை பிட்ச் செய்த பின் பந்து எவ்வளவு ஸ்விங் ஆகிறது என்பதை பொறுத்து பவுலர்கள் தான் அறிவார்கள். அதை தவிர்த்து ஃபீல்டிங் எப்படி செட்டிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தான் தெரியும்” எனக் கூறினார்.

Advertisement