காயமடைந்த அமித் மிஸ்ராவுக்கு பதிலாக பெங்களூரு அணியின் பவுலரை வாங்கிய டெல்லி அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Mishra
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்று மைதானங்களில் மட்டும் நடைபெற்று வரும் இந்த தொடரில் பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

Mishra 1

- Advertisement -

அந்தவகையில் டெல்லி அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த மூன்றாம் தேதி ஷார்ஜாவில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்று கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு பதிலாக டெல்லி அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த 27 வயது சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் துபேவை அணியில் அதிகாரபூர்வமாக இணைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பிறந்த பிரவீன் துபே தற்போது கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட அவர் 8 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி கர்நாடக அணிக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தற்போது அவர் பெங்களூரு அணியின் வலைப்பயிற்சி பவுலராக (நெட் பவுலர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் இருக்கிறார் என்பதும் பயிற்சியில் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

praveen dube

தற்போது பெங்களூர் அணியில் இருந்து அவரை டெல்லி அணி அதிகாரபூர்வமாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தகவலை டெல்லி அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement