அறிமுக போட்டியில் யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய பிரசித் கிருஷ்ணா – விவரம் இதோ

prasidh-krishna
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று முடிந்ததுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 98 ரன்களையும், விராட்கோலி 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Dhawan 1

- Advertisement -

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 62 ரன்களையும், க்ருனால் பாண்டியா 58 ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பேர்ஸ்டோ 94 ரன்களும், ஜேசன் ராய் 46 ரன்களும் குவித்தனர்.

இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி சார்பாக அறிமுக வீரரான பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

prasidh krishna 1

இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனையை யாதெனில் இன்றைய போட்டியில் முதல்முறையாக இந்திய அணிக்காக அறிமுகமாகிய பிரசித் கிருஷ்ணா 8.1 ஓவர்கள் வீசி 54 ரன்களை விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

krishna

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement