ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்த வாரி வள்ளல் பிரசித் கிருஷ்ணா – விவரம் இதோ

Prasidh Krishna
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்த பிரசித் கிருஷ்ணா :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 2-ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 587 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது மூன்றாம் நாளான இன்று இதுவரை 5 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை குவித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மோசமான ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் பிரசித் கிருஷ்ணா நிகழ்த்திய அந்த மோசமான சாதனை யாதெனில் :

- Advertisement -

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜடேஜா ராஜ்கோட் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 23 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இந்நிலையில் அந்த சாதனையை தற்போது பிரசித் கிருஷ்ணா சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ்ஸை இப்படி யாரும் இதுவரை வீழ்த்தியதே கிடையாது.. சாதனை நிகழ்த்திய சிராஜ் – விவரம் இதோ

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜேமி ஸ்மித்துக்கு எதிராக ஒரு ஓவர் வீசிய பிரசித் கிருஷ்ணா நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 23 ரன்களை வாரி வழங்கி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த பவுலர் என்ற ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

Advertisement