இதை சொன்னதுக்கு திட்டுனேன்னு நினச்சு.. ஜோ ரூட் என்னை மோசமா திட்டுனாரு.. சண்டை பற்றி கிருஷ்ணா பேட்டி

Prasid Krishna
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அசாத்தியமான வெற்றி பெற்றது. அந்தப் போட்டி முழுவதுமே பரபரப்பான தருணங்களால் ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்தது.

குறிப்பாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கோபமடைந்து இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவுடன் மோதியது பரபரப்பை உண்டாக்கியது. அதாவது 2வது போட்டியின் காலையில் பவுலிங் செய்த கிருஷ்ணா ஒரு பந்தை வீசிவிட்டு ரூட்டிடம் ஏதோ சொன்னதாக தெரிகிறது. அதனால் கோபமடைந்த ஜோ ரூட் அடுத்தப் பந்திலேயே பவுண்டரி அடித்து விட்டு “என்கிட்ட மோதாதே” என்ற வகையில் கிருஷ்ணாவிடம் கோபமாக பேசினார்.

- Advertisement -

திட்டியதாக நினைத்த ரூட்:

பொதுவாகவே அமைதியாக இருக்கக்கூடிய ரூட் அன்றைய நாளில் அப்படி பேசியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அது பற்றி கேட்டதற்கு ராஜஸ்தான் ஐபிஎல் அணியில் விளையாடியதால் ஜோ ரூட் தம்முடைய நண்பர் என்று கிருஷ்ணா சொன்னார். எனவே அவருடைய விக்கெட்டை எடுப்பதற்காக திட்டமிட்டு சில வார்த்தைகள் சொன்னதற்காக ரூட் அப்படி ரியாக்சன் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “நீங்கள் நல்ல வடிவத்தில் இருக்கிறீர்கள்” என்று சொன்னதை திட்டியதாக நினைத்துக்கொண்ட ஜோ ரூட் தம்மைக் மோசமாக திட்டியதாக பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அந்தத் தருணத்தில் நடந்தது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் விவரித்தது பின்வருமாறு. “அதற்காக ரூட் ஏன் ரியாக்ட் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நீங்கள் நல்ல வடிவத்தில் (ஃஷேப்) இருப்பது போல் தெரிகிறது என்று மட்டுமே அவரிடம் நான் சொன்னேன்”

- Advertisement -

திட்டிய ரூட்:

“கடைசியில் அது என்னை நோக்கி நிறைய திட்டுக்களாக மாறியது. போட்டி முடிந்ததும் நான் ஜோ ரூட் உட்பட அனைத்தையும் இங்கிலாந்து வீரர்களிடமும் பேசினேன். அப்போது என்னவாயிற்று? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு நீங்கள் என்னை திட்டியதாக நினைத்தேன் என்று ரூட் சொன்னார். அவரிடம் நான் உங்களை திட்டவில்லை என்று விளக்கினேன். அதற்கு நன்றாக விளையாட விரும்பியதால் என்னை நானே சூடேற்ற வேண்டியிருந்தது என்று ரூட் சொன்னார்”

இதையும் படிங்க: இதுக்காகவே ரோஹித் 10 வருஷம் விளையாடனும்.. 2019இல் எனக்கும் பண்ட்க்கும் அட்வைஸ் கொடுத்தாரு.. கலீல் பேட்டி

“இதனாலேயே நான் விளையாட்டை விரும்புகிறேன். ஏனெனில் இங்கே ஜோ ரூட் போன்ற ஜாம்பவான் உட்பட அனைவருமே தங்களுடைய அணியின் வெற்றிக்காக சண்டையிடுகிறார்கள். அதை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். நீங்கள் வெற்றிக்காக சண்டையிட வேண்டும். சில நேரங்களில் வெற்றிக்கு திறமையையும் தாண்டி மனதளவில் உறுதியும் வேண்டும்” என்று கூறினார்.

Advertisement