தெ.ஆ தொடருக்கான டி20 அணியில் தோனியை தேர்வு செய்யாததற்கு காரணம் இதுதான் – எம்.எஸ்.கே பிரசாத்

Prasad
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னணி வீரர் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடருக்கு தோனி தேர்வு செய்யாதது குறித்து தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : தோனி உலக கோப்பை தொடர் முடிந்ததும் இரண்டு மாதங்கள் ஓய்வு கேட்டு இருந்தார். அதன்படி அதிகாரப்பூர்வமாக அவருடைய ஓய்வுக்காலம் செப்டம்பர் 21ஆம் தேதி வரை உள்ளது. நாங்கள் தோனியின் ஓய்வு குறித்து எந்த ஒரு கருத்தையும் கூற மாட்டோம். அவரிடம் எந்த ஒரு முடிவையும் கேட்கவும் மாட்டோம். அவரே அவரது முடிவை தீர்மானிக்கட்டும்.

dhoni

மேலும் அதே போன்று தேர்வுக் குழுவுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளது. அதன் பொருட்டு இனிவரும் போட்டிகளில் நாங்கள் ரிஷப் பண்ட்டை முதன்மை கீப்பராக தேர்வு செய்வோம். அப்படியே பண்ட் சிறப்பாக ஆடாவிட்டாலும் அவருக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எம்எஸ்கே பிரசாத் கூறினார். இதன் மூலம் அவர் தோனிக்கு வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement