சச்சின் மகன் என்றே ஒரே காரணத்தினால் அவருக்கு இடம். அப்போ 1009 ரன்கள் அடித்த பிரணவ் எங்கே ? – ரசிகர்கள் கேள்வி

Pranav-2
- Advertisement -

ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம், வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறைஉள்ளது. இதில், 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களும் என மொத்தமாக 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஏலத்தில் முதன்முறையாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவரது அடிப்படை ஏலத் தொகை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

arjun 3

- Advertisement -

இந்நிலையில் தான், தற்போது சமூக வலைத்தளங்களான டிவிட்டர் பேஸ்புக்கில் பலரும் பிரணவ் தனவாடே பெயர் ஏன் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.

யார் இந்த பிரணவ் தனவாடே ?

மும்பை பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே 2016-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படிக்கும் பொழுதே பள்ளி கிரிக்கெட் போட்டியில் 323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்து உலகையே பிரமிக்க வைத்தார். அந்த இன்னிங்ஸில் 129 பவுண்டரிகளையும் 59 சிக்சர்களையும் அடித்து நொறுக்கியிருந்தார். தோனி தான் இவரது ரோல் மாடல் என இவர் குறிப்பிட்டு இருந்தார் . இவரது தந்தை ஒரு ஆட்டோ டிரைவர் என்பதும் குறிப்பிட தக்கது.

- Advertisement -

pranav

கிட்டத்தட்ட அதே வயதுடைய அர்ஜுன் டெண்டுல்கரும் அப்போதிலிருந்தே பிரணவ்வுடன் கம்பேர் செய்யப்பட்டு வந்தார். ஆனால், 2016ல் அந்த மெகா இன்னிங்ஸுக்கு பிறகு பிரணவ் எந்த ஒரு இன்னிங்ஸும் பெரிதாக ஆடவில்லை என்பதே உண்மையாகும். எனினும பெரிய ்அந்த இன்னிங்ஸுக்கு பிறகு, மும்பை கிரிக்கெட் சங்கம் அவருக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை என்கிற விகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு தருவதாக அறிவித்தது.

ஆனால் மகனின் பெர்பாமன்ஸ் சரியாக இல்லாததால், அவரது தந்தை பிரஷாந்த் உதவித் தொகை வேண்டாம் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு 2017ம் ஆண்டே கடிதம் எழுதி அனுப்பிவிட்டார். அதேசமயம், அர்ஜுன் டெண்டுல்கர் தனது பவுலிங்கில் தீவிரமாக கவனம் செலுத்தி படிப்படியாக வளர தொடங்கி தற்பொழுது ஒரு நல்ல லெப்ட் ஆர்ம் பேஸ் பவுலராக வந்து ஐ.பி.எல் ஏலதனதில் பங்கேற்கும் அளவில் வந்து நிற்கிறார்.

pranav 1

மறுபுறம் பிரணவ் கிரிக்கெட்டுக்கு முழுநேர முழுக்கு போட உள்ளதாக வதந்தி வெளிவர வர தொடங்கியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாய் பிரணவ் இது குறித்து எதும் அறிவிக்கவில்லை. பிரணவ் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக பழையபடி வளர்ந்து வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement