சன் ரைசர்ஸ் அணி ஏன் கேதார் ஜாதாவுக்கு சேன்ஸ் கொடுக்கக்கூடாது – முன்னாள் வீரர் சப்போர்ட்

Jadhav

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வர சன்ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி ஒரு மோசமான நிலையில் உள்ளது. அந்த அணியில் துவக்க வீரர்கள் சிறப்பாக துவக்கத்தை அளித்தாலும் மிடில் ஆர்டரில் வரும் வீரர்கள் ரன் குவிக்க திணறி வருவதால் கடந்த இரண்டு போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை பெற்றது.

bhuvi

குறிப்பாக நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்களில் இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் அவுட் ஆன பின் அந்த அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் இறங்க எந்த நல்ல வீரர்களும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில் தற்போது கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதார் ஜாதவ் ஹைதராபாத் அணி ஏலத்தில் அடிப்படையில் எடுத்திருந்தது.

ஆனால் இதுவரை அவரை அந்த அணி பயன்படுத்தவில்லை. கேதர் ஜாதவ் கடந்த பல வருடங்களாக சிஎஸ்கே அணிக்கு விளையாடி அனுபவம் பெற்றவர் என்பதாலும் அவருக்கு கடந்த ஐபிஎல் தொடர் மோசமாக அமைந்தது என்றாலும் ஒரு வகையில் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணியில் அவர் சிறப்பாக விளையாடி உள்ளார் என்று சிலர் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Jadhav-2

இந்நிலையில் தற்போது அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா தனது குரலை எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கேதர் ஜாதவ் சென்னை அணிக்காக பல போட்டிகளில் விளையாடி உள்ளார். அவருக்கு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவம் அதிகம் உள்ளது. அதனால் அவருக்கு சன் ரைசர்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு நல்ல தரமான வீரர் என்பதை அவர் இனி வரும் போட்டிகளில் நிரூபிப்பார்.

- Advertisement -

Jadhav 1

எனவே தற்போது சரியில்லாமல் இருக்கும் மிடில் ஆர்டரின் நிலைமையை மாற்ற கேதர் ஜாதவ்க்கு ஏன் நீங்கள் வாய்ப்பு கொடுக்கக் கூடாது அவர் ஏற்கனவே மிடில் ஆர்டரில் அனுபவம் கொண்ட ஒரு பேட்ஸ்மேன் என்றும் அவ்வப்போது பந்து வீசும் ஒரு பகுதி நேர பந்து வீச்சாளர் என்றும் பிரக்யான் ஓஜா தனது சப்போர்ட்டை கேதார் ஜாதவ்க்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.