என்னை பொறுத்தவரை இவரே சிறந்த கேப்டன். பவுலர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும் – ஓஜா ஓபன் டாக்

Ojha 1
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டிற்குள் 24 டெஸ்ட் போட்டிகள் மற்றும். 18 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். தோனியின் தலைமையில் தனது சர்வதேச போட்டிகளை துவங்கிய வீரர்களில் இவரும் ஒருவர்.

ojha

- Advertisement -

இந்நிலையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் 2018ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திற்கு முதல் தர கிரிக்கெட் போட்டியிலும் அவர் விளையாடி இருந்தார். அதன் பின்னர் எந்த போட்டியிலும் விளையாடாமல் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனக்கு பிடித்த கேப்டன் குறித்த பேட்டி ஒன்றினை அளித்துள்ள அவர் அதில் கூறியதாவது : தோனியே எப்பொழுதும் என்னை பொறுத்த வரை சிறந்த கேப்டன் மேலும் பவுலர்கள்களின் கேப்டன் என்று நான் கூறுவேன். ஒரு பந்து வீச்சாளரைப் புரிந்து கொள்ளும் படி அணியில் கேப்டன் இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அந்தவகையில் அனைத்து வீரர்களின் மனநிலையும் புரிந்துகொண்டு உத்திகளை வகுக்கும் கேப்டனாக தோனி திகழ்கிறார்.

dhonii

தோனியின் திட்டங்கள் எப்போதும் தெளிவாக இருக்கும் அதனால் பந்துவீச்சாளர்களுக்கு அவரது திட்டங்களும் கைகொடுக்கும் என்று ஓஜா கூறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணிக்காக தோனி விளையாடி பல மாதங்களாக ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல்லில் தன்னை நிரூபித்தால் தான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று நெருக்கடியுடன் இந்த ஐபிஎல் தொடரை தோனி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement