ஓவர் கான்பிடன்ஸ் வேணாம். மும்பை அணியை எச்சரித்த – இந்திய அணியின் முன்னாள் வீரர்

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது 13 சீசன் களை கடந்து 14வது சீசனுக்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் ரசிகர்களிடையே இந்தத்தொடர் குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ipl

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ? எந்த வீரர் நன்றாக விளையாடுவார் ? எந்த பவுலர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா இன்று நடைபெற உள்ள பெங்களூரு மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணி வழக்கம் போல இந்த தொடரிலும் போதிய பலம் வாய்ந்த அணியாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் அணியில் இருக்கும் வீரர்கள் சரியான பலத்திலேயே இருக்கின்றனர்.

அதனாலேயே கடந்த வருட ஏலத்தின் போது தேவையில்லாத எந்த வீரர்களையும் ஏலம் எடுக்கவில்லை. அணியின் எதிர்காலத்தை குறிப்பிட்டு சில வீரர்களை மட்டுமே வாங்கியிருந்தனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் குறை சொல்ல முடியாத அளவிற்கு தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர்கள் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றனர். இருந்தாலும் நான் மும்பை வீரர்களுக்கு சொல்வது என்னவென்றால் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அதிக அதீத நம்பிக்கையுடன் விளையாடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

mi

மேலும் இதுகுறித்து பேசிய அவர் : ஒரு அணியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பாக உள்ளது. ஒவ்வொரு வீரரிடமும் இருந்தும் சரியான புரிந்துணர்வு மற்றும் ஆட்டம் மிகவும் அவசியம். அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே சரியாக செயல்பட்டால் அது அணிக்கு மிகப்பெரிய பலம் தான் இருந்தாலும் அதீத நம்பிக்கை இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.