புதுசா ஒரு அணி தான் இந்த ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கும் – முன்னாள் இந்திய வீரர் கணிப்பு

ipl

இந்த வருட ஐபிஎல் தொடர் வழக்கம்போல் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் பாதியில் முடிவடைந்த நிலையில் அனைத்து அணிகளும் குறைந்தது பத்துப் போட்டிகளில் விளையாடி முடித்து விட்டது. இதற்கு மேல் தான் எந்த எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதற்கான சுறுசுறுப்பான ஆட்டம் தொடங்க போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர அனைத்து அணிகளும் முதல் நான்கு இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக நான்காவது இடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலர் எந்தெந்த அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை கணித்து விட்டனர். மேலும் எந்த அணியால் இந்த வருடம் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பது குறித்தும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ளார் முன்னாள் வீரர் பூஜா கூறியதாவது…

rcb

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை ஐபிஎல் தொடரில் மிகப் பிரமாதமாக விளையாடி வருகிறது. 12 வருடமாக கோப்பையை வெல்லாமல் தவித்து வரும் இந்த அணிக்கு இந்த தொடர் மிகவும் சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிக்கு இனிமேல் கனவாக இருக்காது.

- Advertisement -

rcb

தனது கனவின் அருகில் பெங்களூரு அணி நெருங்கிவிட்டதாக நான் நம்புகிறேன. கிறிஸ் மோரிஸ் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் விளையாட ஆரம்பித்து விட்டால் இனி அந்த அணியை கட்டுப்படுத்துவது கடினம் இந்த அணிதான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று தெரிவித்திருக்கிறார் பிரக்யான் ஓஜா.