ஒருவேளை தோனி அடுத்த வருஷம் விளையாடலனா இவர் அணியில் எடுத்து சி.எஸ்.கே அணிக்கு கேப்டன் ஆக்கலாம் – பிரக்யான் ஓஜா

Ojha
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாபெரும் அணியாக உருவெடுத்ததுக்கு மகேந்திர சிங் தோனி தான் முக்கிய காரணம். தோனி அவ்வளவு சிறப்பாக சென்னை அணியை தலைமை தாங்குவார். ரசிகர்கள் மட்டுமின்றி அந்த அணியில் விளையாடும் வீரர்களும் மகேந்திர சிங் தோனி சென்னை அணியை தலைமை தாங்கும் விதத்தைப் பற்றி புகழ்ந்து பேசி இருப்பதை நாம் வெகுவாக கேட்டிருக்கிறோம்.

dhoni

- Advertisement -

இருப்பினும் தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே கேள்வி மகேந்திர சிங் தோனி சென்றுவிட்டால் சென்னை அணியை யார் தலைமை தாங்குவது என்று தான் ? மகேந்திர சிங் தோனி இன்னும் ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுதான் சென்னை அணியுடன் விளையாடுவார் அதன் பின்னர் ஓய்வு எடுத்துக்கொள்வார். எனவே சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

இதற்கு பதில் கூறும் விதமாக பிரக்யன் ஓஜா ஒரு சில வார்த்தைகளை பேசி இருக்கிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அவரை சரியான விதத்தில் அந்த அணி அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே அந்த அணி மிகப் பெரிய அளவில் சறுக்கி வருகிறது.

williamson 1

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடக்க இருக்கிறது. அந்த எழுத்தில் நிச்சயம் சென்னை அணி கேன் வில்லியம்சனை வாங்க வேண்டும். கண்டிப்பாக மகேந்திர சிங் தோனிக்கு பின்னர் ஒரு மிகச் சிறந்த கேப்டன் சென்னை அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்றால் அது கேன் வில்லியம்சன் தான் என்று சொல்வேன்.

williamson 1

ரவீந்திர ஜடேஜா எப்போதும் போல வைஸ் கேப்டனாக இருக்க வேண்டும், ஆனால் தலைமை தாங்கும் பொறுப்பை கேன் வில்லியம்சன் இடம் தான் கொடுக்க வேண்டும். அவரால் மட்டுமே சென்னை அணியை தோணி போல மிக அற்புதமாக தலைமை தாங்க முடியும் என்றும் இறுதியாக கூறி முடித்துள்ளார்.

Advertisement