IND vs WI : இந்தியா அதுல கவனமா இருக்கனும், விராட் கோலி செஞ்சுரி அடிப்பது ரொம்ப கஷ்டம் – பிரக்யன் ஓஜா எச்சரிக்கும் காரணம் என்ன

Pragyan Ojha
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் சுமாராக செயல்பட்டு வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இளம் வீரர் அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2வது நாள் முடிவில் 312 ரன்கள் குவித்து வெற்றி வாய்ப்பை ஆரம்பத்திலேயே பிரகாசப்படுத்தியுள்ளது.

Jaiswal IND vs WI

- Advertisement -

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் புதிய தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியிலேயே பவுண்டரியுடன் தம்முடைய கேரியரை துவக்கி நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலே சதமடிக்கும் 17வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்த அவருடன் 229 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற சாதனை படைத்த கேப்டன் ரோகித் சர்மா தம்முடைய அனுபவத்தை காட்டி சதமடித்து 103 ரன்கள் குவித்து அவுட்டானார்.

ஓஜா எச்சரிக்கை:
அந்த நிலைமையில் வந்த சுப்மன் கில் 6 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 36* (96) ரன்களும் ஜெய்ஸ்வால் 143* (350) ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஜெய்ஸ்வால் இரட்டை சதமடிப்பாரா நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 3 இலக்க ரன்களை தொடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும் 3வது நாளிலிருந்து பிட்ச் முன்பை விட சுழலுக்கு அதிக சாதகமாக மாறும் என்பதால் விராட் கோலி சதமடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

Virat Kohli Rohit Sharma

இருப்பினும் இந்த போட்டியில் முதல் 85 பந்துகளில் பவுண்டரியே அடிக்காமல் நன்கு செட்டிலாகியுள்ள விராட் கோலி சதமடிப்பார் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்போட்டி நடைபெறும் மைதானம் கடலுக்கு மிகவும் அருகே இருப்பதால் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கும் அவர் இந்தியா கவனத்துடன் டிக்ளர் செய்யும் முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நடைபெற்று முடிந்த 2வது நாள் முழுவதும் ஜெய்ஸ்வால் ஆதிக்கம் செலுத்தினார். அவர் பேட்டிங் செய்து சதமடித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. இருப்பினும் 3வது நாளில் அவர் சவாலான பிட்ச்சில் எப்படி பவுலர்களை எதிர்கொண்டு துவங்கப் போகிறார் என்பது முக்கியமாகும். குறிப்பாக சில பவுலர்களை அவர் குறி வைத்து அதிரடியாக விளையாடுவார் என்று நம்புகிறேன். தற்போதைய நிலைமையில் டாமினிக்கா பிட்ச் புதிதாக உள்ளே வரும் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக ரன்கள் குவிக்கும் வாய்ப்பை வழங்காத நிலைமைக்கு மாறியுள்ளது”

Pragyan Ojha

“குறிப்பாக ஆரம்பத்தில் வந்த எளிதான ரன்கள் தற்போது வராததை நம்மால் பார்க்க முடிகிறது. அதனாலேயே விராட் கோலி அதில் செட்டிலாக முயற்சித்தார். எனவே எவ்வளவு நேரம் நிற்கிறாரோ அதற்கேற்றார் போல் அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும். பொதுவாகவே உலகம் முழுவதிலும் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பகட்ட வீரர்கள் இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்கின்றனர். எனவே அதை பயன்படுத்தி விராட் கோலி 3 இலக்க ரன்களை தொட முயற்சிக்க வேண்டும்”

இதையும் படிங்க:IND vs WI : கங்குலியின் 26 வருட சாதனை காலி – அசாருதீனை மிஞ்சி 90 வருட மகத்தான வரலாறு படைத்த ஜெய்ஸ்வால்

“மேலும் இந்த போட்டி கடற்கரை பகுதியில் நடைபெறுவதால் மழை வருவதற்கு வாய்ப்பிருப்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக மழை பெய்த பின் மாறும் பிட்ச்சில் அசத்துவதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். எனவே மழையால் ஓவர்கள் குறைக்க படும் போது இந்தியா அதற்கேற்றார் போல் தங்களது திட்டத்தை மாற்றி செயல்பட வேண்டும். அதே சமயம் தற்சமயத்தில் எடுத்துள்ள 300 – 320 ரன்களே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய அழுத்தமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement