
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் போதும் சில இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாடு காரணமாக ஒரே நாளில் ஹீரோவாக மாறுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரிலும் ஒரு சில இளம் வீரர்களின் மிகச்சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே லக்னோ அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய முகுல் சௌத்ரி பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தார்.
அந்த வகையில் அடுத்த வீரராக நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் அணி சார்பாக விளையாடிய அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரபுல் ஹிங்கே பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு ஒரே இரவில் ஹீரோவாக மாறியுள்ளார்.
ஏனெனில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அறிமுகமான பிரபுல் ஹிங்கே தான் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்ததோடு மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு மூலம் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றதால் அவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அறிமுக பந்துவீச்சாளராக களமிறங்கி விளையாடிய அவர் தனது முதல் போட்டியிலேயே 19 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 18 ஐபிஎல் தொடரிலும் எந்த ஒரு பந்துவீச்சாளரும் போட்டியின் முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது.
இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜடேஜாவிற்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது ஏன்? – ரியான் பராக் விளக்கம்
ஆனால் நேற்றைய போட்டியின் போது முதல் ஓவரை பிரபுல் ஹிங்கே வீசுகையில் இரண்டாவது பந்தில் வைபவ் சூர்யவன்ஷியையும், நான்காவது பந்தில் துருவ் ஜுரேலையும், ஆறாவது பந்தில் பிரிட்டோரியஸ்-சையும் வீழ்த்தி முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.