தோனியுடன் இணையும் பிரபல நடிகர் – காரணம் இதுதான் ?

- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் ஜூரம் இப்போதிலிருந்தே தொற்றிக்கொண்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

deva

- Advertisement -

இரண்டு வருட தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தவருடம் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது ரசிகர்களை ஏற்கனவே மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல்-இல் சென்னை அணியை விளம்பரப்படுத்துவதற்காக அணிவீரர்களை வைத்து ஒரு நடனமும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

prabhudeva

அந்த நடனத்தில் அணிவீரர்களான பிராவோ மற்றும் தோனி வாயில் நாதஸ்வரம் வைத்து வாசிப்பது போலவும், ஆட்டோவில் வந்து இறங்கி பிராவோ,ஹர்பஜன்சிங் மற்றும் சகவீரர்கள் வீதியில் குத்து டான்ஸ் ஆடுவதுபோலவும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம். தோனியும் இந்த பாடலில் நடனமாட இந்த பாடலுக்கான நடனத்தை பிரபுதேவா தான் இயக்குகின்றார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement