டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்க இந்த 2 வீரர்களால் தான் முடியும் – நிக்கோலஸ் பூரான் தேர்வு

Pooran

சமீபகாலத்தில் நிக்கோலஸ் பூரன் என்ற பெயர் டி20 அரங்கில் பெரிய அளவில் உபயோகிக்க பட்டு வருகிறது. இடது கை ஆட்டக்காரரான இவர் தன் விருப்பப்பட்ட திசையில் பந்துகளை பறக்க விடும் திறன் கொண்டவர். மேலும் மிக எளிதில பந்தை டைம் செய்து சிக்ஸர்களை அடிக்க கூடிய ஆற்றலையும கொண்டுள்ளார். மேலும் தனது 25 வயதிலியே பூரன் உலக கிரிக்கெட்டில் மிகவும் அஞ்சப்படும் டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக தனது அடையாளத்தை பதித்துவிட்டார்.இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூரன் பல தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன் மனம் திறந்தார்.

நிக்கோலஸ் பூரன் ஒரு பந்து வீச்சாளர் தன்னை தாக்க முயற்சித்தால் அவரை நானும் தாக்க முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பிறகு இந்திய அணி தனது இரண்டாவது பிடித்த சர்வதேச அணி என்றும் அவர் கூறயுள்ளார். மேலும் டேரன் பிராவோதான் இன்றைய கிரிக்கெட் விளையாட்டில் ‘அழகிய’ கவர் டிரைவை தனது வசம் வைத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

100 மீட்டர் ஸ்பிரிண்டில் ஆடம் ஜாம்பாவையும், மார்கஸ் ஸ்டோயினிஸையும் நிச்சயம் நான் எளிதில் வீழ்த்துவேன் என்று பூரன் நம்பிக்கையுடன் கூறினார். 25 வயதான ஆடம் ஜாம்பா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் இந்த விளையாட்டில் சிறந்த ப்ரொமான்ஸைக் கொண்டுள்ளனர் என்றும் கூடுதல் கருத்து தெரிவித்தார்.

Gayle

யார் டி20ஐ போட்டியில் முதல் 200 அடிக்க போகிறவர் என்ற கேள்விக்கு கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதல் டி20 இரட்டை சதத்தை அடிக்க கூடிய திறன் கொண்ட மாபெரும் பேட்ஸ்மேன்கள் என்றும் பூரன் கருத்து தெரிவித்தார். நிச்சயமாக, அந்த இரண்டு தேர்வுகள் நிறைய அர்த்தமுள்ள தேர்வாகும். ஐ.பி.எல்.இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 175 ரன்கள் எடுத்தபோது, ​​டி20ஐ வடிவத்தில் அதிக ஸ்கோர் எடுத்த தனிநபர் என்ற சாதனையை கெய்ல் வைத்திருக்கிறார்.

- Advertisement -

அது போல சர்மாவும் டி20 ஐ கிரிக்கெட்டில் யாரும் அடித்திறாத 4 சதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சர்மா 5230 ரன்கள் எடுத்துள்ள நிலையில், கெய்ல் 4772 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் 6 சதங்களையும் கெயில் சூறையாடியுள்ளார். தனக்கு பிடித்த டி20 லீக் எனாறால் அது ஐபிஎல் தான் என்றும் பூரன் கூறினார். பிறகு ஆண்ட்ரே ரஸ்ஸல், கிறிஸ் கெய்ல், மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆகியோரில் ஒரு ஓவரில் அதிக சிக்ஸர்களை யாரால் அடிக்க முடியும் என்று கேட்கப்பட்ட தகள்விக்கு சில சிந்தனைகளுக்குப் பிறகு, அது ‘யுனிவர்ஸ் பாஸ்’ கெயில் தான் என்று பூரன் வெளிப்படுத்தினார்.