இதை மட்டும் என்னோட பொண்டாட்டி பாத்தா உடனே டைவர்ஸ் பண்ணிடுவாங்க – கலகலப்பாக பேசிய பாண்டிங்

Ponting

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு வீரர்களை 7 ரன்களில் இருந்த சென்னை அணி மொயின் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அது ஆட்டத்தால் மீண்டும் சிறப்பான பாதைக்குத் திரும்பியது.

raina

பின்னர் ராயுடு, ஜடேஜா, சாம் கரன் என அனைவரும் கைகொடுக்க 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 188 ரன்கள் என்ற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும், மொயின் அலி 36 ரன்களும் குவித்தனர். பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது குறிப்பாக துவக்க வீரர்கள் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் எளிதாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு முன்பாக டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்ககாக ஒரு பிரத்தியேக பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

அதில் சில கலகலப்பான விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். பேட்டியின்போது தாடியுடன் காணப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் : இதை மட்டும் எனது மனைவி தொலைக்காட்சியில் பார்த்தால் நிச்சயம் என்னை தயவு செய்து விடுவார். நான் இந்த தாடியை இரண்டு நாட்களுக்குள் ஷேவ் செய்து விடுவேன். மேலும் போட்டிக்கு முன்னர் நான் க்ளீன் ஷே வில் தான் இருப்பேன்.

- Advertisement -

உங்களில் பலர் இதை கவனித்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் ஒவ்வொரு போட்டிக்கு முன்பு இரவு ஷேவ் செய்து விடுவேன். கிளீன் ஷேவ் உடனே மைதானத்தில் இருப்பேன். நான் எப்பொழுதும் க்ளீன் ஷேவ் பழக்கம் உடையவன் என ரிக்கி பாண்டிங் கலகலப்பாக பேசியதை டெல்லி டேர்டெவில்ஸ் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.