உலகிலேயே அதிக கேட்சிகளை பிடிக்காமல் கோட்டை விட்டவர் இவர்தான் – இந்திய வீரரை அசிங்கப்படுத்திய பாண்டிங்

Ponting

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது 7 ஆம் தேதி துவங்கி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் அறிமுக வீரர் புகோவ்ஸ்கி ஆகியோர் களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த வார்னர் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான புகோவ்ஸ்கி தனது அருமையான ஆட்டத்தை அறிமுக போட்டியிலேயே வெளிப்படுத்தினார். 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்த அவர் முன்னதாக இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்புகளில் இருந்து தப்பித்தார். 26 ரன்களுக்கு ஒரு முறையும், 32 ரன்களில் ஒரு முறையும் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். இந்த இரண்டு கேட்ச்யையுமே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பண்ட் தான் தவறவிட்டார்.

இன்று அவரின் கீப்பிங் செயல்பாடு சற்று மோசமாக இருந்தது என்றே கூறவேண்டும். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் இன்றைய பண்டின் மோசமான விக்கெட் கீப்பிங் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pant 1

இன்றைய போட்டியில் ஒருவருக்கே இரண்டு முறை கேட்சிகளை பண்ட் பிடிக்க தவறினார். அவற்றை கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் பேட்ஸ்மேனுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளங்களில் கேட்சிகளை தவறவிட்டால் நிச்சயம் சதம் அல்லது இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் இன்று அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரிஷப் பண்ட்டிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

- Advertisement -

pant

கேட்சிகளை தவற விட்ட போது இன்று அவர் அபாரமாக விளையாட போகிறார் என்று நினைத்தேன். ஆனால் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிஷப் பண்ட் அறிமுகமான காலத்திலிருந்து பார்த்தீர்களென்றால் மற்றவர்களைவிட உலகிலேயே அதிக கேட்சிகளை தவறவிட்டிருப்பார். அவர் இன்னும் விக்கெட் கீப்பர் பயிற்சியில் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் அசிங்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.