இந்திய பந்துவீச்சாளர்கள் பெஸ்ட் தான். ஆனால் அவர்களை விட இவங்கதான் டாப் – பாண்டிங் சர்ச்சை கருத்து

Ponting
- Advertisement -

இந்திய அணி அனைத்து காலகட்டங்களிலும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணியாக மட்டுமே திகழ்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணி வைத்திருக்கும் பவுலிங் யூனிட்டை பார்க்கும்போது பேட்ஸ்மேன்களுக்கு நிகராக இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் வெற்றியை தேடித்தந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த நான்காண்டுகளாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வேற லெவலில் உள்ளது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் என மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்ட அணியாக இந்திய அணி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வேகப்பந்து வீச்சில் அசத்தி வரும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக பந்து வீசியது.

அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் 19 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களை வீழ்த்தினர். ஸ்பின்னர்களுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை அந்த அளவிற்கு தற்போது இந்திய அணியின் வேகப்பந்து யூனிட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்திய மண்ணில் அசத்துகிறார்கள் இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் அவ்வபோது அவர்கள் சாதிப்பது இல்லை என்பது உண்மைதான் இருப்பினும் அவர்களும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் என்று அனைவரும் பாராட்டுகின்றனர்.

shami

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் பௌலிங் யூனிட் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணி தற்போது பந்துவீச்சில் சிறப்பாக உள்ளது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாகவே வீசுகின்றனர்.

Starc

இருப்பினும் என்னைப்பொறுத்தவரை இந்திய ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவில் திணறுகிறார்கள் ஆனால் லயன் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ரெக்கார்டு வைத்துள்ளார். மேலும் ஸ்டார்க் வேகமும், துல்லியமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஆஸ்திரேலிய நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். எனவே என்னைப் பொறுத்தவரை இந்திய அணி பந்துவீச்சை விட ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு டாப் என்று நான் கூறுவேன் என்று பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement