தமிழக வீரர் அஷ்வினை டீம்ல வச்சிருந்தும் நாங்க பண்ண இந்த தவறே தோல்விக்கு காரணம் – புலம்பிய பாண்டிங்

Ponting
- Advertisement -

நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் ஏழாவது லீக் மேட்சில் டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வினுக்கு 3 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது, அவருக்கு மேலும் ஒரு ஓவர் வழங்கப்படாததே டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 பந்துகளில் 150 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

morris

- Advertisement -

தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அந்தப் போட்டியில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 47 ரன்கள் வாரி வழங்கி இருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார் அஷ்வின். பவர் பிளே முடிந்ததும் பந்து வீச வந்த அஸ்வின் களத்தில் இருந்த டேவிட் மில்லர் மற்றும் ஷிவம் துபே ஆகிய இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்களுக்கும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

இந்த ஆட்டத்தில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அஸ்வின் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவருடைய ஓவரில் ஒரு பவுண்டரி கூட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியவில்லை. கடந்த போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய பின் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் அஷ்வின். ஆனால் அவருக்கு நான்காவது ஓவர் வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை இதுவே டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Ashwin

12 ஓவர்கள் முடிவற்ற நிலையில் 58 ரன்கள் மட்டுமே அடித்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த சூழ்நிலையில் அஸ்வினுக்கு மீண்டும் ஒரு ஓவர் வழங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தாமல், மார்கஸ் ஸ்டொய்னிசை பந்துவீச அழைத்தார் கேப்டன் ரிஷப் பண்ட். அந்த ஓவரில் டேவிட் மில்லர் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்ததன் மூலம் 58லிருந்த ரன்கள் 73 ஆக மாறியது. இந்த ஓவரில் 15 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார் ஸ்டொய்னிஸ்.

- Advertisement -

இந்த ஓவர்தான் மேட்ச்சின் போக்கையே மாற்றியது. ஆனால் அதற்குப் பிறகும் அஸ்வினுக்கு மீதமிருக்கும் ஒருவரை வீசும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை. இறுதியில் கிறிஸ் மோரிஸின் அபார பேட்டிங்கால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேட்டியளித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது :

Ashwin 2

அஷ்வின் மிகத் திறமையாக பந்து வீசினார். சென்ற போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதற்காக அவர் கடினமான வலைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாக இன்று மிக அற்புதமாக பந்துகளை வீசி, எதிரணியின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினார். ஆனால் அவருக்கு இன்னொரு ஓவர் வீசும் வாய்ப்பு வழங்கப்படாததே எங்கள் அணி செய்த மிகப்பெரிய தவறாகும். தோல்விக்கும் இதுதான் காரணம். இந்த முடிவு குறித்து எங்கள் அணியுடன் பேசுவதாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

Advertisement