இந்திய அணி இப்போ எல்லாம் வெளில வந்து சம்பவம் செய்யும் டீமா இருக்காங்க – ரிக்கி பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

வெளிநாட்டில் அசத்தும் இந்திய அணி :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற இந்த வெற்றியின் மூலம் தற்போதைய நிலையில் இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இந்த முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் குறைவான ரன்களில் சுருண்டு இருந்தாலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸின் போது மீண்டெழுந்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சுருட்டு வீசியது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணி இவ்வளவு பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும். டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது அற்புதமான முடிவு.

- Advertisement -

அதோடு முதல் இன்னிங்சில் வெகு விரைவாக வீழ்ந்து இருந்தாலும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை சுருட்டியுள்ளனர். உண்மையில் இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியான அணிதான். தற்போதெல்லாம் இந்திய அணி சொந்த மண்ணை விட வெளிநாட்டில் நடக்கும் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடும் அணியாகவும் வெற்றி பெறும் அணியாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க : 4.3 ஓவரில் 94 ரன்ஸ்.. 23 பந்தில் 77 ரன்ஸ் வெளுத்த இஷான் கிசான்.. ரெய்னா, பொல்லார்ட் சாதனை சமன்

இந்தியாவை விட வெளிநாட்டுகளில் இருக்கும் ஆடுகளங்களை அவர்கள் வெகுவிரைவாக கணித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அதற்கு சான்று இந்த பெர்த் வெற்றி என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement