4.3 ஓவரில் 94 ரன்ஸ்.. 23 பந்தில் 77 ரன்ஸ் வெளுத்த இஷான் கிசான்.. ரெய்னா, பொல்லார்ட் சாதனை சமன்

- Advertisement -

சயீத் முஸ்டாக் அலி கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 29ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் குரூப் சி பிரிவில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சலப் பிரதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு தகுந்தார் போல் பேட்டிங் செய்யாத அந்த அணி 20 ஓவரில் 93க்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக அக்சய் ஜெயின் 14, டெச்சி டோரியா 13 ரன்கள் எடுத்தார்கள். ஜார்க்கண்ட் அணிக்கு அதிகபட்சமாக அங்குள் ராய் 4, ரவி குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 94 ரன்களை துரத்திய ஜார்க்கண்ட் அணிக்கு நட்சத்திர வீரர் இசான் கிசான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் அந்த மைதானத்தில் அவர் நிறைய விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

வெளுத்த கிசான்:

அதைப் பயன்படுத்தி சுமாராக பந்து வீசிய அருணாச்சலப் பிரதேச பவுலர்களை அவர் முரட்டுத்தனமாக அடித்தார். அந்த வகையில் பட்டாசான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 5 பவுண்டரி 9 சிக்ஸருடன் 77* (23) ரன்களை 334.78 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து ஃபினிஷிங் செய்தார். அவருடன் உட்கர்ஷ் சிங் 13* (6) ரன்கள் எடுத்தார்.

அதனால் 4.3 ஓவரிலேயே 94-0 ரன்கள் எடுத்த ஜார்க்கண்ட் பத்து விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த வகையில் இப்போட்டியில் ஜார்க்கண்ட் 20.89 என்ற சரவெடியான ரன் ரேட்டில் இலக்கை தொட்டு வென்றது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் குறைந்தது 1 ஓவருக்கு மேல் விளையாடிய இன்னிங்ஸில் அதிக ரன் ரேட்டில் பேட்டிங் செய்த அணி என்ற சாதனையை ஜார்க்கண்ட் படைத்தது.

- Advertisement -

அதிரடி கிசான்:

அதே போல வான்கடே மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இசான் கிசான் சமன் செய்தார். இதற்கு முன் அந்த மைதானத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் கைரன் பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே அந்த சாதனையை படித்துள்ளார்கள். அந்த வகையில் ஃபார்முக்கு திரும்பியுள்ள இசான் கிசான் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க: தோல்வியை விட இந்த பையனை சதமடிக்க விட்டது டேஞ்சர்.. ஆஸி மீது ஆலன் பார்டர், ஹைடன் அதிருப்தி

அவரை ஹைதராபாத் அணி 11.25 கோடிக்கு தங்களுடைய அணிக்காக விளையாட வாங்கியுள்ளது. இதை அடுத்து அடுத்த வருடம் அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார். சமீப காலங்களில் இந்திய அணியில் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்ப போராடி வருகிறார்.

Advertisement