தோல்வியை விட இந்த பையனை சதமடிக்க விட்டது டேஞ்சர்.. ஆஸி மீது ஆலன் பார்டர், ஹைடன் அதிருப்தி

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று கணித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலடி கொடுத்தது.

முன்னதாக அந்தப் போட்டியில் பந்து வீச்சில் கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அவருடன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் சதமடித்து 100* ரன்கள் விளாசி வெற்றிக்கு உதவினார்.

- Advertisement -

சதமடித்த கோலி:

அந்த வகையில் ஃபார்முக்கு திரும்பிய அவர் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதத்தை அடித்த ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில் சுமாரான ஃபார்மில் இருந்த விராட் கோலியை முதல் போட்டியிலேயே சதமடிக்க விட்டது தோல்வியை விட ஆஸ்திரேலியாவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆலன் பார்டர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த தன்னம்பிக்கையால் அடுத்த போட்டிகளிலும் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பார் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெரிய அளவில் நங்கூரமாக விளையாடாமலேயே விராட் கோலி சதத்தை அடித்தது எனக்கு உண்மையில் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் இந்தப் பையன் எஞ்சிய தொடரில் முழுமையான தன்னம்பிக்கையுடன் விளையாடுவதை நாங்கள் விரும்பவில்லை. ஒருவேளை விராட் கோலி இதே போல் விளையாடினால் இது எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

ஹைடன் அதிருப்தி:

அதே நிகழ்ச்சியில் விராட் கோலி சதத்தை அடிக்கும் அளவுக்கு சுமாராக விளையாடிய ஆஸ்திரேலியா பற்றி ஹைடன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலேயே ட்ரிக்கை தவற விட்டது. குறிப்பாக நேதன் லயன் வந்து பேசிய போது அவருக்கு எதிராக மிட் ஆன், ஆஃப் சைட் கேட்ச்சிங், ஆஃப் சைட் கேட்ச்சிங் ஃபீல்டிங் செட்டிங் செய்யப்பட்டிருந்தது”

இதையும் படிங்க: வரலாறு காணாத மோசமான இன்னிங்க்ஸை விளையாடிய இலங்கை அணி – வச்சு செய்ஞ்ச தென்னாப்பிரிக்கா

“அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி மிகவும் எளிதாக ஸ்ட்ரைக்கை மாற்றி விளையாடினார் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாட தயாராகி வருகிறத அதற்கு முன்பாக இந்தியா ஆஸ்திரேலியா பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.

Advertisement