அடுத்த கில்கிறிஸ்ட் இந்தியாவின் ரிஷப் பண்ட் தான் – அதற்கு ரிக்கி பாண்டிங் என்ன சொல்லியிருக்காரு?

Ponting
- Advertisement -

இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 3 வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் விளையாட தகுதியான விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனிக்கு பின் இந்திய அணிக்கு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் கிடைப்பாரா என எழுந்த கேள்விக்கு பதிலாக ரிஷப் பண்ட் தற்போது விளையாட துவங்கியுள்ளார்.

Rishab Pant

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வயதிலேயே எம்எஸ் தோனியை மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இந்தியா போன்ற ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு எப்போதுமே சவாலாக இருக்க கூடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக அவர் ஏற்கனவே சரித்திர சாதனை படைத்துள்ளார்.

அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட்:
கிரிக்கெட் வரலாற்றின் ஆரம்ப காலகட்டங்களில் விக்கெட் கீப்பர்கள் என்பவர்கள் வெறும் பந்தை பிடித்து போடுபவர்களாக இருந்து வந்தார்கள். ஆனால் அந்த வரலாற்றை மாற்றி எழுதிய ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிரிஸ்ட் பந்துவீச்சாளர்களை பந்தாடி அதிரடியாக ரன்களை குவித்து ஒரு விக்கெட் கீப்பர் என்றால் பேட்டிங் செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உருவாக்கினார்.

Gilchrist

சொல்லப்போனால் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்களை ஆடம் கில்கிறிஸ்ட்க்கு முன் – பின் என 2 வகையாக பிரிக்கலாம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் உருவெடுத்த எம்எஸ் தோனி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் வெறும் பந்தை பிடித்து போடுபவார்கள் அல்ல என உலகிற்கு நிரூபித்துக் காட்டினார். சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் விக்கெட் கீப்பர்களை எம்எஸ் தோனிக்கு முன் பின் என 2 வகையாகப் பிரிக்கலாம். மொத்தத்தில் ஆடம் கில்கிறிஸ்ட், எம்எஸ் தோனி ஆகியோரின் வரிசையில் ஒரு தரமான விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார் என ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் பதில்:
அதிலும் குறிப்பாக ஆடம் கில்கிறிஸ்ட் போல இடது கை பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பராக விளங்கும் ரிஷப் பண்ட்டை அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் என சமீப காலங்களாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுவது வழக்கமாக மாறி விட்டது. இந்நிலையில் ஆடம் கில்கிறிஸ்ட் உடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிட்டு பேசுவது பற்றி ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி ஐசிசியின் அதிகாரபூர்வ பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு.

Ricky-Ponting

“ஆம், அவர்கள் (கில்கிறிஸ்ட் – ரிஷப் பண்ட்) இருவரும் ஏறக்குறைய ஒரே வகையானவர்கள். ரிஷப் பண்ட் களத்தில் இறங்கினால் அதிரடியாக விளையாட கூடியவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஒரு ஆல்-டைம் சிறந்த விக்கெட் கீப்பருடன் ஒப்பிடுவதற்கு முன்பாக அவரை 50 – 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விடுங்கள். மேலும் அவர்களின் குணத்தை பார்த்தால் ரிஷப் பண்ட் எப்போதும் அதிகமாக கூச்சலிட்டுக் கொண்டு போட்டிபோட கூடிய ஒருவராக உள்ளார். கில்கிறிஸ்ட்டும் அதே மாதிரியானவர் தான். ஆனால் கில்கிறிஸ்ட் சற்று அமைதியாக இருப்பதுடன் பேட் கையில் கிடைத்தால் ரிஷப் பண்ட் போல அதிரடியாக விளையாட கூடியவர்” என கூறியுள்ளார்.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் உடன் ஒப்பிடுவதற்கு முன்பாக ரிஷப் பண்ட் இன்னும் 50 – 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறியுள்ள ரிக்கி பாண்டிங் அப்போதுதான் இந்த ஒப்பீடு பற்றி ஒரு முழுமையான கருத்தை கூற முடியும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போதைய நிலைமையில் பார்க்கும்போது ஆடம் கில்கிறிஸ்ட் போலவே ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார் என ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

Adam Gilchrist Rishab Pant

கில்கிறிஸ்ட் போலவே:
“கில்கிறிஸ்ட் எப்போதும் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார். ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவருடன் நான் பேட்டிங் செய்தேன். அப்போது 4 – 5 விக்கெட்டுகளை இழந்து நாங்கள் தடுமாறிய போது அந்த நாளின் கடைசி ஒரு சில ஓவர்களை வீச பாகிஸ்தானின் டேனிஷ் கனேரியா வந்தார். அப்போது ஆடம் கில்கிறிஸ்ட் அவரை சிக்ஸர் அடிக்க முயன்றார். அந்த சமயத்தில் அவர் அருகே சென்ற நான் “இப்போது இந்த மாதிரி அதிரடியாக விளையாட வேண்டாம். நாளை நாம் பேட்டிங் செய்ய அழகான நாள் காத்திருக்கிறது” என கூறினேன்.

- Advertisement -

ஆனால் அடுத்து வீசப்பட்ட பந்தில் மறுபடியும் அதிரடியாக விளையாடிய அவர் மெகா சிக்ஸரை பறக்க விட்டார். அப்போது இவரிடம் நாம் பேசுவது எந்த பலனையும் அளிக்காது என்பதை புரிந்து கொண்டேன். அதன்பின் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் அடுத்த நாளிலும் சிறப்பாக விளையாடினார்” என ஆடம் கில்கிறிஸ்ட் எந்த மாதிரியான குணத்தைக் கொண்டவர் என்பது பற்றி ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இன்னும் இந்தியாவுக்காக விளையாடவே இல்லை – அதற்குள் கோடீஸ்வரர்களான 5 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “அவரை போலவே தான் ரிஷப் பண்ட். அவர் இதுவரை எத்தனை சதங்கள் அடித்துள்ளார் என எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சில சதங்களை சிக்சருடன் அடிக்க முயன்று ஒருசில முறை 90களில் அவுட்டாகி உள்ளார். அது நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல என்பது சரிதானே” என கூறியுள்ள ரிக்கி பாண்டிங் ஆடம் கில்கிறிஸ்ட் போலவே எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் யார் பேச்சையும் கேட்காமல் எப்போதும் அணிக்காக அதிரடியாக விளையாட கூடியவராக ரிஷப் பண்ட் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுவது போல கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சிட்னி டெஸ்ட் போட்டியில் 90களில் அவுட்டாகி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றார். அதன்பின் காபா நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 89* ரன்களை விளாசிய அவர் 32 ஆண்டுகளுக்கு பின் அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக தோற்கடிக்க இந்தியாவிற்கு உதவினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆடம் கில்கிறிஸ்ட் போல விளையாடி வரும் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் தலைமையில் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement