இந்த ஐ.பி.எல் தொடரில் இஷாந்த் சர்மா இதுவரை விளையாடாததற்கு காரணம் இதுதான் – கோச் பாண்டிங் விளக்கம்

Ponting
- Advertisement -

இந்தியாவில் 14-ஆவது ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் தற்போது வரை 9 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் டெல்லி அணி தன் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து நான்காவது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியில் பல இளம் வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். அந்த அணியின் பயிற்சியாளராக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

அப்போதிலிருந்தே தற்போது வரை அந்த அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த முறை இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது தலைமையிலான இளம் டெல்லி அணி பலமாக காணப்படுகிறது.

இருப்பினும் டெல்லி அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா இடம் பெற்றும் தற்போது வரை அவரி ஆட வைக்காதது ரசிகர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் என்னும் 24 வயது இளைஞர் விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது இடத்தை கனகச்சிதமாக பிடித்துக் கொண்டார் ஆவேஷ் கான்.

Ishanth

இந்நிலையில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஏன் இன்னும் ஆடவில்லை என்பது குறித்து பேசியிருக்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். இதுகுறித்து அவர் கூறுகையில்… முதல் போட்டியில் இசாந்த் சர்மாவின் காலில் சுளுக்கு இருந்தது. அவரால் விளையாடுமளவுக்கு பிட்னஸ்சுடன் அவர் இல்லை. அந்த நேரத்தில் தான் ஆவேஷ் கான் தனக்கு கொடுத்த வாய்ப்பினை இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

கடந்த சில வருடங்களாகவே எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் இம்முறை சற்று உடல் எடை கூட்டி பிட்னஸ் உடன் இருக்கிறார். அதுமட்டுமின்றி பயிற்சியிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. நிறைய ஸ்லோயர் பந்துகளை அவர் வீசியதால் அவரை களமிறக்கினோம் அவரும் தனது வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நன்றாக ஆடி கொண்டிருப்பதால்தான் இன்னும் இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது போல் பதில் கூறியிருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

Advertisement