ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங் தனது கிரிக்கெட் வாழ்வில் தன்னையே நடுநடுங்க வைத்த ஒரு ஓவரை பற்றி பேசியுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட ஓவரிலேயே மிகச்சிறந்த ஓவர் எது என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் வீரருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். பலவருடம் கிரிக்கெட் அனுபவம் கொண்ட இவரே அந்த ஒரு குறிப்பிட்ட ஓவரை புகழ்கிறார் என்றால் அந்த அளவுக்கு அது மிகவும் சிறப்பான ஓவராக இருக்கும் எனபது நிச்சயம் உண்மைதான்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஊரடங்கில் முடங்கியுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது நடந்த ஒரு போட்டியின் வீடியோவை பதிவு செய்தது.
இந்த வீடியோவில் ரிக்கி பாண்டிங் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரு பிலின்டாபிடம் தனது விக்கெட்டை இழந்தார். உண்மையாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகச்சிறந்த ஓவர் இதுவாகும். இங்கிலாந்து அணி இந்த ஓவர் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் 282 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
Best over I ever faced. Class reverse swing at 90odd mph! https://t.co/EUdN9P64Cr
— Ricky Ponting AO (@RickyPonting) April 10, 2020
ஆஸ்திரேலிய அணியை 279 ரன்கள் இங்கிலாந்து அணி சுருட்டி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளையும், நான்காம் நாள் இரண்டாவது ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அன்று ஆன்ட்ரு பிளின்டாப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதில் ரிக்கி பாண்டிங் விக்கெட்டும் ஒன்று. பிளின்டாப் வீசிய ஒரு ஓவரில் ரிக்கி பாண்டிங்கை 5 பந்துகளில் டக் அவுட் ஆக்கினார்.
இந்த ஓவர் முழுவதும் மிகவும் அபாயகரமாக வீசினார் பிளின்டாப். அந்த வீடியோவை தற்போது ரிக்கி பாண்டிங் பகிர்ந்துள்ளார். மேலும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட மிகச் சிறந்தவர் என்று பதிவு செய்துள்ளார் ரிக்கி பாண்டிங்.ரிக்கி பாண்டிங் ஒரு ஜாம்பவான் வீரராவார் சர்வதேச கிரிக்கெட்டில் 77 சதங்களுடன் 27 ஆயிரம் ரன்களை குவித்தவர் இவர். மேலும் மூன்று உலகக் கோப்பை தொடரில் வென்றவர்.
ரிக்கி பாண்டிங் தனது கருத்தினை கூறிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு மிகச்சிறந்த ஓவராக பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.